சர்ச்சையில் சிக்கிய தமிழன் பிரசன்னா காவல்நிலையத்தில் பாஜக சார்பில் புகார் ! திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவை சேர்ந்த பிரசன்னா நேற்று இரவு தனது சமூகவலைத்தள பக்கமான ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார், அதில் பல்வேறு நடவடிக்கைகள் அடுத்த […]
Continue reading …கோவை,மே 3வே.மாரீஸ்வரன் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி, அரசியல் அதிகார அமைப்பு அதிரடி முடிவு . தாழ்த்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் இருந்து எங்களை விடுதலை செய்ய வேண்டும், அத்துடன் எங்கள் தேவேந்திரகுல சமூகத்திலுள்ள உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து எங்கள் சமூக மக்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு வங்கிக்காக எங்கள் தேவேந்திரகுல சமுதாயத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் அதன்பிறகு எங்களை புறக்கணித்து விடுகிறார்கள். அதனால் அரசியல் அதிகார அமைப்பும் […]
Continue reading …சென்னை, மே 2 மத்திய அரசு, எங்கள் கல்வி மீதும், காவிரி மீதும் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களிடமிருக்கும் கல்வியை கைப்பற்ற வேண்டும் என்பது உலக வரலாற்றில் அறமற்ற முறையில் அத்துமீற நினைக்கும் அதிகார வர்க்கத்தின் முதல் செயல் திட்டம் ஆகும். ஏற்கனவே நாங்கள் நீட் என்கிற எமனுக்கு பத்துக்கும் மேற்பட்ட அறிவும் செறிவும் நிறைந்த எங்கள் […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 27 துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், […]
Continue reading …தமிழகத்தில் வரும் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி (வியாழன்) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு […]
Continue reading …சேலம், மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்திய திருநாட்டின் 14வது ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுவாக மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதரவானவர்களே ஜனாதிபதியாக அமர முடியும் என்பதால், தற்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் ஆதரவில் பலரும் ஜனாதிபதி கனவில் மிதந்தபடி உள்ளனர். அதேபோல் நாங்களும் சளைத்தவர்களல்ல என்பதுபோல ஜனாதிபதி தேர்தலில் தங்களின் நெருக்கடி இருக்கும் என்பது போல காங்கிரசும் தனது பங்கிற்கு செயல்பட்டுக்கொண்டுள்ளது. ஆளும் பி.ஜே.பி. சார்பில் 3 […]
Continue reading …விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். நேற்று (திங்கள்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பாமக உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மாற்றம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், “எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு […]
Continue reading …இராமேஸ்வரத்தில் அ.தி.மு.க. சேர்மன் அர்சுணனால் பாதிக்கப்பட்டு உயிருக்கு பயந்து நடுங்கும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான ராமசாமி மற்றும் அவரது மனைவி ஆர்.கஸ்தூரி (அ.தி.மு.க. மகளிர்அணி நகர செயலாளர்) இருவரும் வாழ்வையே தொலைத்துவிட்டு, கதறுவதாக தகவல்கள் வர விசாரித்தோம். மேற்படி இராமசாமி ராமேஸ்வரத்தில் (ஸ்ரீராமஜெயம் கம்பெனி) விசைப்படகு வைத்து நல்ல நிலையில் இருந்துள்ளார். இவர் 1988 ஆம் வருடம் சந்தானம் என்பவரிடம் இரண்டு 2.42 சென்டிற்கு கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளார். அந்த நிலத்திற்கான பணத்தை முழுவதும் கொடுத்ததற்கான ஒப்பந்த […]
Continue reading …2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இணங்க தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “2014-15 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து 2014 ஜூலை 17-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தேன். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் எய்ம்ஸ் […]
Continue reading …நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வியாபம், லலித் மோடி விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் மழைக்கால தொடரில் கடும் புயல் வீசும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகளை சமாளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மத்தியப் பிரதேசத்தை மையம் கொண்டுள்ள வியாபம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் வழக்குகளில் தொடர்புடைய […]
Continue reading …