பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலில் முடிவின்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக எட்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் […]
Continue reading …திமுக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. திமுக கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் […]
Continue reading …தேர்தல் ஆணையம் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி தொகுதியின் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 426617 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி என்பவர் 123214 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 303403. இத்தொகுதியில் நாம் தமிழர் […]
Continue reading …பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத் பல ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வந்தவர். இம்முறை தேர்தலில் பாஜக சார்பில் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். […]
Continue reading …புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்ட ஏழாவது முறையாக போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்துள்ளார். தென்காசி தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் என்பவர் 338221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 182193 ஆகும். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் […]
Continue reading …தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்களவை தேர்தலில் கருத்துக்கணிப்பில் தவறான முடிவை வெளியிட்டதற்காக கருத்துக்கணிப்பு நிபுணர் கதறி அழுத சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1ம் தேதி 7வது கட்ட தேர்தலும் முடிந்த கையோடு பல கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் எவ்வளவு இடங்களில் வெற்றிபெறும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தனர். அவ்வாறாக கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு ஆக்ஸிஸ் […]
Continue reading …இன்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் வெற்றி […]
Continue reading …நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாமல் ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவும் உள்ளார். அவர் மட்டக்களப்பில் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடிய போது, “அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளை அடிக்கப்படுகிறது, தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். இலங்கையில் வரும் அக்டோபர் 17ம் தேதி அதிபர் தேர்தல் […]
Continue reading …டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த மார்ச் 21ம் தேதி டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு செல்லும் வகையில் ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 1ம் தேதியுடன் இடைக்கால […]
Continue reading …இன்று காலை 7 மணி முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திடீரென முன்னாள் முதலமைச்சர் மெகபூபா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்று 6வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் இன்று தான் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நீண்ட அரசியல் […]
Continue reading …