ஓவைசி பிரச்சாரத்தில், “ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆவார், ஆனால் அதை நான் பார்ப்பேனா என்று தெரியாது, ஆனால் கண்டிப்பாக என் கனவு ஒருநாள் நடக்கும்” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஓவைசி கடந்த சில நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். நேற்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியில் ஓவைசி, “இந்தியாவின் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. […]
Continue reading …ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே ஆந்திர மாநிலம் வாக்குச்சாவடியில், மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று நாட்டின் ஒருசில மாநிலங்களில் நான்காம் கட்ட பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இன்று பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலில் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் கட்சி, காங்கிரஸ் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆகிய மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் ஆந்திராவில் பரபரப்பாக வாக்குகள் […]
Continue reading …சமூக வலைதளங்களில் பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். குருத்வாராவில் வழிபாடு […]
Continue reading …ஆளுநர் மாளிகை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி அளிக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணை சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து […]
Continue reading …பாஜக வேட்பாளர் மாதவி லதா மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது. ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்குள்ளானார். இதற்கிடையே நான்காம் கட்டத் தேர்தலில் வாக்களிக்க பர்தா […]
Continue reading …தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடிக்கு தற்போது 74 வயதாகிறது, பாஜகவில் பொதுவாக 75 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதால் பிரதமர் மோடி பிரதமர் ஆனாலும் அவர் ஒரு ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பார்” என்றும் பேசி உள்ளார். இன்று தேர்தல் பிரச்சார மேடையில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசிய போது “75 வயதாகிய எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். மோடிக்கும் தற்போது […]
Continue reading …அரவிந்த் கெஜ்ரிவால், “மோடி மீண்டும் பிரதமரானால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கைது செய்து விடுவார், அதற்கான திட்டம் இருக்கிறது” என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் இருந்த நேற்று வெளியானார். இன்று நடந்த பிரம்மாண்டமான பேரணியில் அவர் பேசும்போது, “அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி கைது செய்வார், அவர் மீண்டும் பிரதமர் ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் […]
Continue reading …சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதிக்கு கேப்டன் விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதுடன் பிரேமலதா விஜயகாந்த் பேரணியாக செல்ல முயன்ற போது அவரை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குடியரசு தலைவரிடம் விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். அந்த விருதை விஜயகாந்த்துக்கு சமர்ப்பிக்கும் விதமாக சென்னை வந்தவுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதி வரை பேரணி நடத்த திட்டமிட்டார். ஆனால் அனுமதியின்றி பேரணி நடத்தக் கூடாது என […]
Continue reading …காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு மனைவி இருந்தால் இரண்டு லட்சம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதில் மகாலட்சுமி திட்டம் என்று அறிவிப்பு பலரையும் கவர்ந்தது என்பதும் இந்த திட்டத்தின்படி ஏழை குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் […]
Continue reading …டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்டு இடைக்கால ஜாமின் […]
Continue reading …