வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு நான்கு நிதியாண்டுகளுக்கு வருமான வரியை முறையாக தாக்கல் செய்யாததால் 1700 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடக்கி அதிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி தேர்தல் செலவுகளை செய்ய விடாமல் வருமான வரித்துறை தடுக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறது. […]
Continue reading …பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அவர், “இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜகவின் கடின உழைப்பாளிகளுடன் உரையாடல் நடத்த உள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் எப்படி மக்கள் மத்தியில் பணியாற்றுவதும், நமது கட்சியின் நல்லாட்சி நிகழ்ச்சி நிரல் மாநிலம் முழுவதும் திறம்பட தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதும் பாராட்டுக்குரியது. தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் […]
Continue reading …அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர், “பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். பாஜக ஆட்சியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதா? மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை. […]
Continue reading …சமீபத்தில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் பிரச்சாரம் செய்த போது எல்லோரும் பளபளப்பாக பவுடர் பூசி இருக்கிறீர்கள், ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா? என்று கேட்டது பெரும் சர்ச்சையானது. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் திமுகவின் திமிர் பேச்சு என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் […]
Continue reading …தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். பிரேமலதா கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நமது வெற்றி வேட்பாளராக ராமச்சந்திரனுக்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திலே வாய்ப்பு கொடுத்து அமோக வெற்றியை இந்த தேர்தலில் தர வேண்டும். திமுகவினரும் சரி அவங்க பினாமிகளும் சரி இங்கு இருக்கின்ற […]
Continue reading …பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளரும் நகர்ப்புற துறை அமைச்சர் அமைச்சர் கே.என் நேரு அவரது மகன் அருண் நேருவுக்கு குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சமயத்தில் கரூர் அருகே உள்ள தோகைமலை கொசூரில் “எனக்கு மயக்கமாக இருக்கிறது. என்று ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன். “எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்துவிட்டு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் […]
Continue reading …தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் 18வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று அறிவித்தார். நாடு முழுவதும் அதன்படி தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கன. வேழவேந்தனுக்கு ரூ. […]
Continue reading …அலங்காநல்லூரில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாக சென்று வேட்பாளர்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்கு இடையே அலங்காநல்லூரில் அதிமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிர்வாகிகளுடன் இணைந்து கிராமம் கிராமமாக அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்தார். அப்போது அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் பெண்களை […]
Continue reading …சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இக்குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. சென்னை புழல் […]
Continue reading …பிரியங்கா காந்தி இந்திய இளைஞர்கள் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரியங்கா காந்தி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மோடி அரசை நோக்கி அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர், “இந்திய இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஏன்? ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி […]
Continue reading …