இஸ்ரேல்- பாலஸ்தீன போர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர் என்பதே கொடூரமானது, அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “கடந்த பத்து நாட்களாக காஸா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி […]
Continue reading …ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எந்த வகையிலும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9, 10) டில்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டு தலைவர்களும் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரமாட்டார் என சீனா […]
Continue reading …அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகளவில் முக்கியமான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டில்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர். உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க […]
Continue reading …ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்துக் கொண்டுள்ளது சந்திரயான், மங்கள்யான் திட்டங்கள் மூலம் நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் கால் பதித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உலக அரங்கில் பெரும் சாதனையை படைத்து வருகிறது. அதை தொடர்ந்து அடுத்த கட்டமாக சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆதித்யா திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி சூரியன் குறித்த ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் […]
Continue reading …பின்லாந்து அரசு உலகிலேயே முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட் என்பது புத்தக வடிவில் மட்டுமே உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. பின்லாந்து நாட்டில் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ளது. விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை டிஜிட்டல் பாஸ்போர்ட் குறைத்துள்ளதாகவும் பயணிகள் பயணிகள் மிக எளிமையாக பயணம் செய்ய முடியும் என்றும் பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. சில நகரங்களில் மட்டும் தற்போது டிஜிட்டல் பாஸ்போர்ட் சோதனை முயற்சியாக […]
Continue reading …சமீபத்தில் ரஷ்யா நிலவை ஆய்வு செய்வதற்காக லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது. நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் நொறுங்கி விழுந்ததால், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 10 மீட்டர் விட்டதிற்கு பள்ளம் ஒன்று இருப்பதை நாசாவின் எஸ்ஆர்ஓ ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இந்த பள்ளம் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது. இந்த பள்ளத்தால் நிலவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா […]
Continue reading …பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வெப்ப மண்டல புயல் காரணமான சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவின் தெற்குப் பகுதியில் வெப்ப மண்டல புயலான சாவோலா உருவானது. இப்புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. மத்திய பில்லிப்பைன்ஸ் மற்றும் லூசோன் தீவுகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்தன. இதில் ஒருவர்உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் […]
Continue reading …‘ஆதித்யா எல் 1’ விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் இஸ்ரோ நிறுவனத்தில் இன்று தொடங்கியது. இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் பல புதிய ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தன. சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. அதன்படி, ‘ஆதித்யா எல் […]
Continue reading …யூடியூப் இந்தியர்களின் 19 லட்சம் வீடியோக்கள் உட்பட உலகம் முழுதும் 64 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியதாக அறிவித்துள்ளது. யூடியூப் நிர்வாகம் சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்களின் சமூக வழிகாட்டுதலை மீறுதல் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன, அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே 19 லட்சம் இந்தியர்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 6 லட்சத்து […]
Continue reading …திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்து நாட்டில் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெறும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. திடீரென இங்கிலாந்து நாட்டில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பல விமானங்கள் ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதாகவும் இங்கிலாந்தில் இருந்து கிளம்ப வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 200க்கும் அதிகமான […]
Continue reading …