Home » Archives by category » உலகம் (Page 21)

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து!

Comments Off on உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து!

ஸ்காட்லாந்து அரசு உலகின் முதல் ஓட்டுனர் இல்லாத பேருந்தை இயக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் இல்லாத பேருந்து முதல் முறையாக ஸ்காட்லாந்து நாட்டில் இயக்கப்பட இருப்பதாக அந்நாட்டின் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார். தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை எனவும், சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த பேருந்துகள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் […]

Continue reading …

37 நாடுகளில் நாளை வெளியாகும் “தி கேரளா ஸ்டோரி”!

Comments Off on 37 நாடுகளில் நாளை வெளியாகும் “தி கேரளா ஸ்டோரி”!

இலவச புரமோஷனாக அமைந்துள்ளது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு பலதரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகள். இதையடுத்து இத்திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளதால், நாளை முதல் 37 நாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி பிரதமர் மோடி பெருமையாக பேசியது பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது. இதையடுத்து இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இந்த படத்தின் தயாரிப்பாளர் […]

Continue reading …

மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

Comments Off on மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

மைக்ரோசாப்ட் இவ்வாண்டு சம்பள உயர்வில்லை என அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இவ்வாண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில்லை என்று மைக்ரோசாப்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த முடிவுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வில்லை என்றாலும் போனஸ், பங்கு ஒதுக்குதல், […]

Continue reading …

ஜப்பானில் வசூலை குவித்த ஆர்.ஆர்.ஆர் படம்!

Comments Off on ஜப்பானில் வசூலை குவித்த ஆர்.ஆர்.ஆர் படம்!

“ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் ஜப்பானில் மட்டும் ரூ.119 கோடி வசூலை அள்ளி உள்ளது. ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து 2022ம் ஆண்டு வெளியான படம் “ஆர்.ஆர்.ஆர்.” இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் “பாகுபலி” திரைப்படம் சாதனையை முறியடித்தது. சமீபத்தில், ஜப்பான் மொழியில், இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. ஜப்பான் நாட்டில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அங்கு இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜப்பானில் 44 நகரங்களில் […]

Continue reading …

கூகுளின் புதிய செயலி அறிமுகம்!

Comments Off on கூகுளின் புதிய செயலி அறிமுகம்!

ஏஐ என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் நுழைந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சாட் ஜிபிடி உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் போட்டியாக உலகின் முன்னணி நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால், மற்ற தொழில்துறையைப் போன்றே இந்த ஏஐ தொழில் நுட்பத்திலும் போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் பிரேசில், அமெரிக்க ஆராய்ச்சியாளர் மனிதர்களின் 80 சதவீத பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவுக்கு மாற்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். இன்றைய நவீன இணையதள உலகில் […]

Continue reading …

பிசிசிஐ வாரியத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு?

Comments Off on பிசிசிஐ வாரியத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு?

ஐசிசி கவுன்சில் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ அமைப்பு அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. இதற்கடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருவாய் ஈட்டித் தருகின்றன. இந்த 3 நாடுகளுக்கு ஐசிசி கவுன்சில் வருவாயை சமவிகிதத்தில் பகிர்ந்து அளித்து வந்தது. வரும் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையிலான பகிர்வு திட்டத்தை ஐசிசி அமைப்பு […]

Continue reading …

இம்ரான் கான் கைது செல்லாது உச்சநீதிமன்றம் அதிரடி!

Comments Off on இம்ரான் கான் கைது செல்லாது உச்சநீதிமன்றம் அதிரடி!

சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது கைது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018ம் ஆண்டு பதவி ஏற்ற இம்ரான் கான் மீது ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் 5,000 கோடி ஊழல் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி அவரை மே […]

Continue reading …

பின்லாந்தில் பாலம் இடிந்து விபத்து!

Comments Off on பின்லாந்தில் பாலம் இடிந்து விபத்து!

பின்லாந்து நாட்டில் தற்காலிக பாலம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 27 பேர் காயமடைந்துள்ளனர். பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்சிக்கு வெளியே எஸ்பூ என்ற நகரில் மக்கள் நடந்து செல்வதற்காக ஒரு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் இன்று திடீரென்று இடிந்து விழுந்ததில், சுற்றுலா சென்றுவிட்டு, திரும்பிய 8ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் மாணவர்களை மீட்டு அருகிலுள்ள […]

Continue reading …

இம்ரான்கான் கைது!

Comments Off on இம்ரான்கான் கைது!

முன்னாள் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானை 8 நாட்கள் சிறையிலடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அவர் லாகூரிலிருந்து வந்துள்ளார். நேற்று நீதிமன்றம் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் இம்ரான்கானை கைது செய்தனர். அவரை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இம்ரான்கானின் கட்சியினர் அவரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும், துன்புறுத்தி வருவதாகவும் புகார் கூறியுள்ளனர். […]

Continue reading …

பிரதமர் மோடி ஜோ பைடனுடன் சந்திப்பு!

Comments Off on பிரதமர் மோடி ஜோ பைடனுடன் சந்திப்பு!

ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சந்திப்பின்போது அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடந்து போவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து பல நாட்டு அதிபர்களை சந்தித்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு முன்னணி நாடுகளின் ஆதரவு பெருகி வருகிறது. வரும் ஜூன் மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக […]

Continue reading …