தேனி பகுதியில் டிரைவர் ஒருவர் ஐடி ரெய்டு வருவோம் என வருமானவரித்துறை அதிகாரி போல் பேசியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரி என கூறி தொழிலதிபர்களிடம் மோசடி செய்து வந்த விக்னேஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் ஆக்டிங் ஓட்டுநராக பணி புரிந்த விக்னேஷ்குமார். இவர் வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி பல தொழிலதிபர்களை தொடர்பு […]
Continue reading …பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்திய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளரிடம் அவர், “புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாய மொழி இல்லை, அது ஆப்ஷனலாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அறிவித்த பின்னர்தான் தமிழ் மொழியை பயிற்று மொழி என திமுக அரசு அறிவித்தது. இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக, ஏன் உருது திணிப்பை எதிர்க்கவில்லை? […]
Continue reading …பழுதடைந்த ரத்த சேகரிப்பு பேருந்தால் ரத்த சேகரிப்பு பாதிப்பு. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நடமாடும் ரத்த சேகரிப்பு பஸ் மற்றும் இரண்டு ரத்த சேகரிப்பு வேன்கள், கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், ரத்த சேகரிப்பு பஸ் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ரத்த சேகரிப்பு தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. உடனடியாக இவற்றை சரி செய்ய வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.
Continue reading …மொரிஷியஸ் ஹை கமிஷனர், மீனாட்சி அம்மன் தரிசனம். இந்தியாவில் உள்ள மொரிஷியஸ் நாட்டின் ஹை கமிஷனர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வந்தார்..மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கு இன்று (3.7) மொரிஷியஸ் நாட்டின் ஹை கமிஷனர் ஹெச். தில்லும் தனது மனைவியுடன் சுவாமி மற்றும் அம்மன் தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
Continue reading …வைகை அணையில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள். வைகை ஆணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீரை, இன்று (3.7) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி ஆகியோர் திறந்து வைத்தார்கள். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Continue reading …தமிழ்நாடு அரசின் அரசிதழில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மெத்தனால் பயன்படுத்தப்படுவதை தடுக்க மெத்தனால் சேமிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தற்போது […]
Continue reading …கல்வி விருது வழங்கும் விழாவை நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் கட்டமாக நடத்தினார். அவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர் மாணவர்கள் திருப்தியுடன் விஜய் கையில் பாராட்டு பத்திரம் மற்றும் பரிசு பொருட்களை பெற்று சென்றனர். விழாவில் அவர், “மாணவ மாணவிகளுக்கு பல அறிவுரை கொடுத்தார். குறிப்பாக நீங்கள் எந்த துறையில் விருப்பம் கொள்கிறீர்களோ அந்த துறையில் நீங்கள் பிரபலமாகுங்கள். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை” என்று பேசினார். இன்று இரண்டாம் கட்ட கல்வி […]
Continue reading …எல்எல்பி என்ற படிப்புக்கு தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சட்டப்படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் […]
Continue reading …270 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை மூலம் கடத்திய வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சபீர் அலி என்பவர் சென்னையில் சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சபீர் அலி வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பாஜக பிரமுகர் பிருத்வி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் […]
Continue reading …தமிழக அரசு பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உள்பட சில நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறப்படுவதால், அதிரடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் உள்ள பானிபூரி கடைகளில் அம்மாநிலத்தின் உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக சோதனை நடத்தியதில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக புற்றுநோயை உருவாக்கும் என்றும் அத்தகைய கெமிக்கல்கள் அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …