Home » Archives by category » தமிழகம் (Page 340)

பத்திரிகையாளர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

Comments Off on பத்திரிகையாளர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்!
பத்திரிகையாளர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

புது டெல்லி, ஏப்ரல் 22 நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊடகத் துறை பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்லும், செய்தியாளர்கள், கேமராமேன்கள், புகைப்பட செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர், நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும், நோய் பாதித்த பிற பகுதிகளுக்குச் […]

Continue reading …

கோவை போலீசுக்கு கொரோனா ! காவல்துறையினர் அதிர்ச்சி !!

Comments Off on கோவை போலீசுக்கு கொரோனா ! காவல்துறையினர் அதிர்ச்சி !!
கோவை போலீசுக்கு கொரோனா ! காவல்துறையினர் அதிர்ச்சி !!

கோவை, ஏப்ரல் 22 வே. மாரீஸ்வரன்   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் பகுதியில் வசிக்கும் 39 வயது பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ். ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.     இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர். மற்றும் அவரது உறவினர்கள், அவருடன் […]

Continue reading …

கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு

Comments Off on கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு
கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஏப்ரல்22  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை : கொரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்றுபணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிறஅரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சிஅமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், எவருக்கேனும் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் எனவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் எனவும், எதிர் பாராதவிதமாக இறப்பு ஏற்படுமானால் அவர்களின் […]

Continue reading …

ரேசன் பொருட்களை பெற வீடுகளுக்கு வரும் டோக்கன் – தமிழக அரசு!

Comments Off on ரேசன் பொருட்களை பெற வீடுகளுக்கு வரும் டோக்கன் – தமிழக அரசு!
ரேசன் பொருட்களை பெற வீடுகளுக்கு வரும் டோக்கன் – தமிழக அரசு!

சென்னை, ஏப்ரல்22 கொரோனாநோய்த் தொற்றினை தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக, மாண்புமிகு அம்மாவின் அரசு மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது. இன்று வரை 1,89,01,068 […]

Continue reading …

சிறு அலட்சியம்… பேராபத்து : சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது !

Comments Off on சிறு அலட்சியம்… பேராபத்து : சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது !
சிறு அலட்சியம்… பேராபத்து : சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது !

சென்னை, ஏப்ரல்22 சிறு அலட்சியம்… பேராபத்து ! சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழகத்தின் நிலைமையை துல்லியமாக வர்ணிக்க வேண்டுமென்றால், ‘‘சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’’ என்று தான் கூற வேண்டும். கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரு நாட்களுக்கு குறைந்தால், நான்கு நாட்களுக்கு அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராதது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் […]

Continue reading …

கொரோனா : அதிசயம்.. ஆனால்… உண்மை.! உணவை மருந்தாக்கிய தமிழக அரசு.!!

Comments Off on கொரோனா : அதிசயம்.. ஆனால்… உண்மை.! உணவை மருந்தாக்கிய தமிழக அரசு.!!
கொரோனா : அதிசயம்.. ஆனால்… உண்மை.! உணவை மருந்தாக்கிய தமிழக அரசு.!!

கோயம்புத்தூர், ஏப்ரல் – 22 வே. மாரீஸ்வரன்   மனிதர்களைக் கொல்லும் கொடிய தொற்று நோயான கொரோனா அபாயகரமான நோய் என்பதால் அந்த நோயை வெல்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பதால் உணவையே மருந்தாக்கி கொரோனா நோயாளிகளை மீட்டு வருகிறது தமிழக அரசு.     சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நேரத்தில் கோவை இ. எஸ். ஐ. மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படும் முதல் மூன்று நாட்களுக்கு […]

Continue reading …

கொரோனா செயலி : அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!

Comments Off on கொரோனா செயலி : அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!
கொரோனா செயலி : அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!

சென்னை, ஏப்ரல்22 கோவிட்-19 க்கு எதிராக அதிவிரைவு செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி BIT வளாகம் முன்முயற்சி எடுத்து விடுத்துள்ள இந்தத் திட்டத்தில். மும்பை ஐ.ஐ.டி யில் இயங்கும் Spoken Tutorial Project, சென்னையிலுள்ள Madras School of Social work (MSSW), புதிய தொழில் முனைவோருக்கான வழிகாட்டு மய்யமாக பெங்களுரில் இயங்கும் Derbi Foundation, பேரிடர் மேலாண்மையில் சிறப்பான அனுபவங்களையும் பயிற்சிகளையும் கொண்ட நிறுவனம் என இந்தியா […]

Continue reading …

கொரோனா நிவாரணம் : மனிதநேய வட்டாட்சியர் மகேஷ்குமார்!

Comments Off on கொரோனா நிவாரணம் : மனிதநேய வட்டாட்சியர் மகேஷ்குமார்!
கொரோனா நிவாரணம் : மனிதநேய வட்டாட்சியர் மகேஷ்குமார்!

கோவை, ஏப்ரல் 21 வே.மாரீஸ்வரன்   கோவையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த பிரகாஷ் பிழைப்பு தேடி தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் தன் கைக்குழந்தையுடன் கோவை துடியலூர் அருகே உள்ள கவுண்டர்மில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தனர்.   தற்போது 144 தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் அவர் பணிபுரிந்த மில் இழுத்து மூடப்பட்டது. வேலையில்லாத காரணத்தினாலும் வருமானமின்றி அவதிப்பட்டு வந்தனர். […]

Continue reading …

மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

Comments Off on மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை!
மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

சென்னை, ஏப்ரல், 21 தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இன்று தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த மரு.சைமன் அவர்களின் சடலத்தினை அடக்கம் செய்ய சென்றபோது, அன்னாரின் உறவினர்கள், சவ ஊர்தி ஓட்டுநர், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட 21 […]

Continue reading …

மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை !

Comments Off on மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை !
மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை !

சென்னை, ஏப்ரல், 21   “மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை.” தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் தலைவணங்கி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.   கொரனாவெனும் கொள்ளை நோயிடமிருந்து மக்களை காத்திட மருத்துவர்களும், செவிலியர்களும் தன்னலம் பாராமல், கடுமையாக போராடி மருத்துவப்பணி செய்து வருகையில் அதன் காரணமாக அவர்களுக்கும் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவர்களும் உயிரிழந்த நிகழ்வு கடும் வேதனையையும், அச்சத்தையும் தருகிறது.   மக்களை கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து […]

Continue reading …