வே. மாரீஸ்வரன் கோயம்புத்தூர் : கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கோவையில் பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்கள் ஒருவேளை சோறு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுடன் சாலையோரவாசிகளும் அன்றாட சோற்றுக்கு அல்லல்பட்டு வந்த நேரத்தில் ஏழை மக்களின் வீட்டிற்கும் சாலையோரவாசிகளுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று உணவு வழங்கும் பணியில் சேவாபாரதி மற்றும் ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் களத்தில் இறங்கி பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகின்றனர். கோவை […]
Continue reading …சென்னை : தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆய்வினை மேற்கொண்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ்மாநிலம் முழுவதும்உள்ள 19,533 அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளிலும், 1,253 வாரிய வாடகைக் குடியிருப்புகளிலும், கொரோனா […]
Continue reading …புதுடெல்லி: கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஏற்கனவே ஊரடங்கை ஏப்ரல் 14 க்குப் பிறகு தொடர முடிவு […]
Continue reading …கருணையே வடிவான இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். துரோகத்தால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் உயிர்த்தெழுந்து வந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் கொண்டாடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே இறைவனை வழிபட்டு, பெரும் துன்பத்தில் இருந்து மனிதகுலம் விடுபடவேண்டும் என்கிற பிரார்த்தனையை முன்வைத்திடுவோம். “உன் மீது, நீ அன்பு செலுத்துவது போல பிறர் […]
Continue reading …சென்னை : கொரோனா என்கிற கொடூர கிருமி உலகம் முழுக்க கோரத்தாண்டவமாடி மனித குலத்தையே நிலைகுலைய செய்து கொண்டிருக்கின்ற இச்சூழலில் மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருநூறு நாடுகளை சிதைத்து சீரழித்துக்கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவை இருபத்தைந்தாவது இடத்திலும் இந்திய ஒன்றியத்திலிருக்கும் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையை முதலிடத்திலும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் தலைநகரமான சென்னையில் இருந்து தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அறத்தோடு […]
Continue reading …வே. மாரீஸ்வரன் கோயம்புத்தூர் : கொரோனா வைரஸ் தொற்று கோவை மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டு வரும் இந்த நேரத்தில், கொரோனா வைரசால் சுமார் 86 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் மழை கிராமங்களான சர்க்கார் போரெத்தி, ஜாகிர் போரெத்தி, பச்சன் வயல், சவுக்கு காடு, புதுப்பதி, ஆகிய மலைக்கிராம மலைவாழ் […]
Continue reading …சென்னை : நம்முயிரை காக்கும் நோக்கில் தம்முயிரை துச்சமாக மதித்து, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரத்துறையினர், மாநகராட்சியினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,’ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்‘ என்ற கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை வலியுறுத்தி, ஒரு இன்னிசைப் பாடலை, இசையமைப்பாளர் ‘சாதகப் பறவைகள்’ சங்கர் மற்றும் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படக்குழுவினர் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். சாதகப் பறவைகள் சங்கர் தனது கருத்தாக்கத்தில், வைரபாரதியின் பாடல் வரிகளுக்கு இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். […]
Continue reading …சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 19 பேர் கொண்ட குழு, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு […]
Continue reading …உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவின் மீது கிருமித் தொற்று தாக்குதலை மட்டுமின்றி, அரசாலும், தனிமனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத, வரலாறு காணாத பொருளாதாரத் தாக்குதலையும் நடந்த்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலின் பக்கவிளைவுகளால் இந்தியாவில் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளால் அமைப்பு சார்ந்த பணியாளர்களை விட, அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த […]
Continue reading …