Home » Archives by category » தமிழகம் (Page 348)

61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் !

Comments Off on 61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் !

சென்னை: தமிழகத்தில் 61 ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பபட்டுள்ளனர்.  இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் உள்ள விவரம் வருமாறு, மதுரை போக்குவரத்து துறை துணை கமிஷனர் பாலகோபாலன் தூத்துக்குடி எஸ்.பி.,யாக, மயிலாப்பூர் மயில்வாகனன் – போக்குவரத்து துறைக்கும், திருவள்ளூர் எஸ்பி – பொன்னி, லஞ்ச ஒழிப்பு துறைக்கும், நாகை எஸ்.பி., விஜயகுமார் சிபிசிஐடி., பிரிவுக்கும் , கடலூர் எஸ்பி சரவணன் சிபிசிஐடி எஸ்பியாகவும், நீலகிரி எஸ்.பி.,யான சண்முகபிரியா சென்னை சைபர் குற்றப்பிரிவுக்கும், மாற்றப்பட்டுள்ளனர்.  சென்னை நுண்ணறிவு பிரிவு […]

Continue reading …

ஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு !

Comments Off on ஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு !

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி (வியாழன்) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு […]

Continue reading …

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன !

Comments Off on அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன !

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார். தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Continue reading …

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

Comments Off on ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. ஜெயலலிதா […]

Continue reading …

“எம்ஜிஆர் எ லைஃப்” – ஆர்.கண்ணன் !

Comments Off on “எம்ஜிஆர் எ லைஃப்” – ஆர்.கண்ணன் !

பெங்குயின் பதிப்பகம், ஆர்.கண்ணன் எழுதியிருக்கும் எம்ஜிஆர் எ லைஃப் என்ற புத்தகத்தை பதிப்பித்திருக்கிறது. மெட்ராஸ் புக் கிளப் மற்றும் பெங்குயின் பதிப்பகம் இணைந்து நடத்திய இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பெற்றுக் கொண்டார். சிறு வயதில் இருந்து திராவிட இயக்கங்களில் இருக்கும் கண்ணன், எம்ஜிஆர் பற்றிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஐநா சபையில் இருந்தவர் இந்த […]

Continue reading …

இந்திய ஜனாதிபதியாக மீண்டும் ஒரு பெண் – கணித்து சொல்கிறார் சேலத்து ஜோதிடர் !

Comments Off on இந்திய ஜனாதிபதியாக மீண்டும் ஒரு பெண் – கணித்து சொல்கிறார் சேலத்து ஜோதிடர் !

சேலம், மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்திய திருநாட்டின் 14வது ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுவாக மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதரவானவர்களே ஜனாதிபதியாக அமர முடியும் என்பதால், தற்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் ஆதரவில் பலரும் ஜனாதிபதி கனவில் மிதந்தபடி உள்ளனர். அதேபோல் நாங்களும் சளைத்தவர்களல்ல என்பதுபோல ஜனாதிபதி தேர்தலில் தங்களின் நெருக்கடி இருக்கும் என்பது போல காங்கிரசும் தனது பங்கிற்கு செயல்பட்டுக்கொண்டுள்ளது.  ஆளும் பி.ஜே.பி. சார்பில் 3 […]

Continue reading …

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர் !

Comments Off on பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர் !

மதுரை வைகை ஆற்றில் இன்று காலை பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்றது. ஆற்றில் இறங்கிய அழகர் மீது […]

Continue reading …

தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி !

Comments Off on தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி !

தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. இவருடன் சேர்த்து 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ராஜ் பவனில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசியக் காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டார். முன்வரிசையில் சசிகலாவின் உறவினரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். 

Continue reading …

ஜல்லிக்கட்டு நடத்த மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம்: சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேறியது !

Comments Off on ஜல்லிக்கட்டு நடத்த மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம்: சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேறியது !

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், கடந்த 21-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக் கப்பட்டது. இது தொடர்பான மசோதா சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆளுநர் உரையுடன் நேற்று காலையில் தொடங்கியது. இதில், திருத்தச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் […]

Continue reading …

புயல், வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.62,136 கோடி வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வலியுறுத்தல் !

Comments Off on புயல், வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.62,136 கோடி வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வலியுறுத்தல் !

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். மேலும் ‘வார்தா’ புயல் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரி யுள்ள ரூ.62,136 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை […]

Continue reading …