
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமி ஒருவருக்கு மட்டுமே உள்ளது என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, “அதிமுக திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல், இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை, எத்தனையோ கட்சிகள் வரும் போகும், ஆனால் திமுக பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விட மாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு […]
Continue reading …
அமெரிக்காவில் உள்ள பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசிய பின், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டனர். பிரதமர் மோடி பொறுமையாக அனைத்து எம்பிகளுக்கும் கையெழுத்து […]
Continue reading …
அதிமுக எம்பி சிவி சண்முகம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டத்தில் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியளித்தார். முன்னாள் அதிமுக அமைச்சரும் எம்பியுமான சிவி சண்முகத்திற்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்றதோடு அவருக்கு கருணாநிதி குறித்த நூல் ஒன்றினையும் பரிசாக அளித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர் கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு தனி விமானத்தில் பீகார் சென்றார். இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன. பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்வுடன் தமிழக […]
Continue reading …
தமிழக ஆளுநர் ரவி வேலைவாய்ப்பை பெருமளவிற்கு தமிழகத்தில் திறமையான இளைஞர்கள் இல்லை என தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வேளச்சேரியிலுள்ள தனியார் கல்லூரியில் தமிழக ஆளுநர் ரவி நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியபோது, “நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு கல்வி மட்டும் போதாது, தனித்திறமை வேண்டும். பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தன்னை சந்தித்தபோது […]
Continue reading …
மத்திய அமைச்சர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நாடு முழுவதும் செல்ல அதிகாரம் உண்டு என்றும் அவர்கள் யாரை வேண்டுமானாலும் விசாரணை செய்யலாம் என்றும் கூறியுள்ளார். தமிழக அரசு சமீபத்தில் தங்கள் அனுமதியை பெற்றே சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அரசாணை வெளியிட்டது. அதேபோல் அமலாக்கத்துறை முன்னறிவிப்பு இன்றி சோதனை செய்வதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் விகே சிங் “சிபிஐ அமலாக்கத்துறைக்கு இந்தியா முழுவதும் செல்ல அதிகாரம் உள்ளது. […]
Continue reading …
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சியில் ஓரணியில் திரள வாருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று உள்ளது. சற்றுமுன் பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார், அப்போது அவர், “எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள அழைப்பு விடுகிறேன். இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர். நாட்டு மக்களை பிரிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. நாட்டையும் மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாட்னாவில் தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டலடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் கூட்டத்தில் பேசியபோது, “2024ம் தேதி மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். மீண்டும் இந்தியாவின் பிரதமர் மோடி தான் என்பதை உறுதியாக […]
Continue reading …
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அப்போது அமெரிக்க அதிபரின் மனைவிக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். பின் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் […]
Continue reading …
பாஜக நிர்வாகி உமா கார்கி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பாஜக நிர்வாகி உமா கார்கி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி கேட்டனர். நீதிமன்றம் ஒரு நாள் காவலில் விசாரிக்க சைபர் கிரைம் போலீசுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் […]
Continue reading …