
ஏற்கனவே அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அவசர செயற்குழு கூட்டம் குறித்த தேதியை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை […]
Continue reading …
தீர்த்தவாரி குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார். நேற்று சென்னை அருகே மூவரசம்பட்டியிலுள்ள குளம் ஒன்றில் 5 அர்ச்சகர்கள் குளத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்தார். சென்னையை அடுத்த மூவரசம்பட்டியிலுள்ள குளம் பஞ்சாயத்து நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக தான் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று வருகிறது. […]
Continue reading …
வங்கி ஊழியர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. நடுத்தெருவில் பொதுமக்கள் மத்தியில் அடித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஹஸ்பத் சிங் வங்கி ஒன்றில் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளின் பணத்தை வங்கி ஊழியர்கள் கையாடல் செய்துவிட்டதாகவும் இதையடுத்து கணக்கு புத்தகத்தை மறைத்துக் கொண்டு தான் கணக்கு கேட்டால் தவறான அணுகுமுறையை கையாண்டதாகவும் அவர் வங்கி ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து வங்கி […]
Continue reading …
இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தோர் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேருக்கு மண்டை உடைந்தது. மேலும், சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித்தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளானர். இதுகுறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த ரவுடிகள் […]
Continue reading …
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அஜீத்திடம் ஒரு மணி நேரம் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அஜீத்தின் தந்தை காலமானதால், அவருக்கு ஆறுதல் கூற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜீத்தின் இல்லத்திற்கு சென்றனர். இந்த சந்திப்பு குறித்து சி விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமாரின் தந்தை மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் சார்பாக […]
Continue reading …
டிஜிபி பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வருகிறார் என்பதும் அன்றைய தினம் அவர் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் வருகையை ஒட்டி தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை கமிஷனர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
Continue reading …
இன்று தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டுமென்று வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுதும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 29 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில், 15 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 14 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கட்டண […]
Continue reading …
ரஷ்யா இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவளித்து, போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய […]
Continue reading …
மராட்டியத்தில், சிவசேனாவினின் (உத்தவ் அணி) எம்பி.சஞ்சய் ராவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் சிவசேனா( உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற மேலவை எம்பியாக சஞ்சய் ராவத் உள்ளார். இவருக்கு பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற லாரன்ஸ் பிஸ்க்னோய் கும்பலிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளது. இதுபற்றி அவர் போலீஸீல் புகாரளித்துள்ளார். அதில்,’டெல்லியில் வந்து என்னைச் சந்தித்துப் பார்..ஏகே.47 ரக துப்பாக்கியால் சுட்டுக் […]
Continue reading …
கடந்த 9 நாட்களாக “70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புகைப்படக் கண்காட்சி மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் விஜய்சேதுபதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நமது […]
Continue reading …