Home » Archives by category » அரசியல் (Page 177)

புதுடில்லி பள்ளிகைளை பார்த்து வியந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Comments Off on புதுடில்லி பள்ளிகைளை பார்த்து வியந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் பயணமாக புதுடில்லி சென்றுள்ளார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். இன்று புதுடில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் அவற்றின் நவீன கட்டமைப்புகளை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர் “டில்லி அரசு பள்ளிகளை போல் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போகிறோம். எல்லா துறைகளையும் போல் தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. […]

Continue reading …

நீட் தேர்வு தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம் – வேல்முருகன் !

Comments Off on நீட் தேர்வு தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம் – வேல்முருகன் !

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அத்தேர்வை ரத்து செய்யக்கோரி இதுவரை சமரசமற்ற போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சனநாயக வழிமுறைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கருத்தமர்வுகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளை தொடர்ச்சியாக நடத்தி வந்ததோடு, தோழமை அமைப்புகள் முன்னெடுத்த நிகழ்வுகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முக்கிய பங்காற்றி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 02.05.2016 -ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில்,  அரசமைப்புச் […]

Continue reading …

பல்கலைக்கழகங்களால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்; தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Comments Off on பல்கலைக்கழகங்களால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்; தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு  வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. திருவரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி 2006-ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. […]

Continue reading …

பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது : எச்சரிக்கும் எம்.பி ஜோதிமணி!

Comments Off on பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது : எச்சரிக்கும் எம்.பி ஜோதிமணி!

சீமான் ஒரு பாஜக அடிவருடி என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி எம்.பி கடுமையாக சாடியுள்ளார். சீமான் குறித்து ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டதாவது :   சீமான் ஒரு பாஜக அடிவருடி, பாஜக வெறுப்பு புரையோடிக்கிடக்கும், கல்வி,வேலைவாய்பு, தொழில், சமூகநீதியை முன்னிறுத்தும் தமிழகத்தில், தன்னால் நேரடியாக களமிறங்கி மத, கலவர அரசியலை செய்ய முடியவில்லை என்பதால் பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது. எச்சரிக்கை தேவை என தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் சீமான் […]

Continue reading …

உத்தர பிரதேசத்தில் வன்முறை: ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது

Comments Off on உத்தர பிரதேசத்தில் வன்முறை: ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது

லக்கிம்பூர், அக் 4: உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற நேரில் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலும், விவசாயிகள் இத்தகைய போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள […]

Continue reading …

இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

Comments Off on இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் […]

Continue reading …

நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

Comments Off on நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள், இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue reading …

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

Comments Off on நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விவசாயிகளின் நலன் கருதி அவற்றை காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்க வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஈபிஎஸ் இன்று (செப். 19) வெளியிட்ட அறிக்கை: ஏற்கெனவே எனது அறிக்கையில் தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏரிப் பாசனம் மூலம் நெல் பயிரிட்ட மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திமுக […]

Continue reading …

TNPSC தொகுதி 4 பணிகள்: இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்!

Comments Off on TNPSC தொகுதி 4 பணிகள்: இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 3 வகையான அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசுப் பணிக்கு ஆள்தேர்வு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் சில பணிகளுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு 6417 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த  2019 ஆம் ஆண்டு ஜூன் […]

Continue reading …

படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டை – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் !

Comments Off on படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டை – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் !

படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன், தமிழக மீன்வள இயக்குனர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், […]

Continue reading …