தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது கூட்டணி கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தேமுதிக தற்போது வெளிப்படையாக கூறியுள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் என்ற முறையில் சசிகலாவிற்கு எனது ஆதரவு உண்டு. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என […]
Continue reading …சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால்சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் அங்கிருந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் நுரையீரலில் தொற்றின் அளவு அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதை தொடர்ந்து வெளியான […]
Continue reading …சசிகலா வருகையால் எடப்பாடியாருக்கு சிக்கல் ஏற்படுமா என தெரியவில்லை சசிகலா வருகையால் எடப்பாடியாருக்கு சிக்கல் ஏற்படுமா என தெரியவில்லை சென்னை: சசிகலா உடல்நிலை தேறி, அதிமுகவுக்குள் இணைவதாக இருந்தால், நிச்சயம் பல மாறுதல்கள் கட்சிக்குள் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.. அதேசமயம், எடப்பாடியாருக்கு 2 சிக்கல்கள் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், அதிமுக, திமுக கட்சிகள் மும்முரத்தில் உள்ளன.. மற்றொரு பக்கம் பாஜக பல சைலண்ட் வியூகங்களை கையில் எடுத்துள்ளது.. அதில் ஒன்றுதான் சசிகலாவின் […]
Continue reading …எனது நிலத்தால் தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல முடியவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் நிரூப்பிருத்தால் அரசியலை விட்டே விலக தயார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல கால்வாய் அமைக்க கேபி முனுசாமி நிலம் உள்ளதால் திட்டத்தை தடுப்பதாக தெரிவித்தார். கலைஞர் மகன் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டான் […]
Continue reading …வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருடைய தாத்தா போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி அல்லது திருவாரூர் தொகுதியிலோ போட்டியிடுவார் என்றும் அவருடைய தந்தையும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்பது குறித்து மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், “திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே […]
Continue reading …உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய் தொற்றுக்காரணமாக கடந்த 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று இரவு 8.05 மணியளவில் அரசு மருத்துவமனையில் இருந்து 15 நிமிடத்தில் செல்லக்கூடிய அமைந்தகரைள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எம்ஜிஎம் மருத்துமனை ஒன்பதாவது மாடியில் உள்ள எக்மோ வார்டில் அறை எண் 934 இல் அமைச்சர் காமராஜ்க்கு வென்டிலேட்டர் மூலம் தீவிர […]
Continue reading …இரண்டு நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.முதல்வர் பழனிசாமியுடன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை நாளை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால்,கூட்டணி மற்றும் தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை […]
Continue reading …தமிழர்களுக்கு தித்திப்பான செய்தியை அறிவித்த மோடி. !பிரதமரால் நெகிழ்ச்சி. ! உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. தமிழர் இன வரலாற்றில் தமிழினம் தோன்றிய காலத்திலிருந்து அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி பெருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்குகிறது என்பதை நம் மொழியின் பழம்பெரும் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தை ஒன்றாம் தேதியான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், […]
Continue reading …வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கு தோராய செலவாக 621 கோடி ரூபாயை மாநில அரசிடம் கேட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில்தான் சட்டபேரவை தேர்தல் செலவுக்கு தோராய தொகையாக 621 கோடி ரூபாய் கேட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி […]
Continue reading …ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறி வந்த நிலையில், ரஜினி சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை, நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஜினி ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். மீண்டும் ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டு, நான் கண்டிப்பாக அரசில் வரமாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கன்னியாகுமரி […]
Continue reading …