Home » Archives by category » அரசியல் (Page 191)

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கலக்கம்!!

Comments Off on புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கலக்கம்!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமாக இருந்த ஜான்குமார் எம்எல்ஏ, சாதகமற்ற சூழல் நிலவினால் காங்கிரஸிலிருந்து விலகுவேன் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இச்சூழலில் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில காங்கிரஸ் தலைவர் கோரியுள்ளார். திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த ஜான்குமார் பாஜகவுக்கு மாறப்போவதாகத் தகவல் வெளியானது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு ஜான்குமார் வென்றார். அப்போது, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். இதனால் அவர் போட்டியிட தனது பதவியை […]

Continue reading …

இந்தமுறை திமுகவை வீழ்த்தினால் முடிந்தது கதை – அமைச்சர் தங்கமணி!!

Comments Off on இந்தமுறை திமுகவை வீழ்த்தினால் முடிந்தது கதை – அமைச்சர் தங்கமணி!!

மணப்பாறையில் அதிமுக மகளிர்குழு பூத் கமிட்டியை துவக்கி வைத்து, கையேட்டினை வெளியிட்டு ஆலோசனை வழங்கும் விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டார். அந்த விழாவில் எல்.எல்.ஏ சந்திரசேகர், முன்னாள் எம்.பி.குமார், ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் வந்தாலே பொய்யான வாக்குறுதிகளை தருவது திமுகவின் வழக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள் […]

Continue reading …

ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை ஆ.ராசா எப்படி சொல்லலாம்…-வழக்கறிஞர் ஜோதி

Comments Off on ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை ஆ.ராசா எப்படி சொல்லலாம்…-வழக்கறிஞர் ஜோதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அரசமைப்புச் சட்டத்தை மீறிய மிகப்பெரிய கொள்ளைக்காரி என உச்சநீதிமன்றம் சொன்னதாக ஆ.ராசா கூறுவது பொய் என்று மூத்த வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஜோதி, முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்காக 12 வழக்குகளில் வாதாடி 11 வழக்குகளில் வெற்றிபெற்றுத் தந்ததாகக் கூறினார். ஆனால், 12ஆவது வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பாதியிலேயே சசிகலா தம்மை விரட்டி விட்டதாகவும், டிடிவி தினகரன் தனது உயிருக்கு உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி மிரட்டியதாகவும் […]

Continue reading …

என்னது நான் சங்கியா…? கமல் ஆவேசம்

Comments Off on என்னது நான் சங்கியா…? கமல் ஆவேசம்

அறத்தின் பக்கம் நிற்கும் தன்னை பார்த்து சங்கி, பி டீம் என்று விமர்சிப்பவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக சமூகவளைதளங்களில் அதிமுகவினரும், திமுகவினரும் கமலஹாசன் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், […]

Continue reading …

பிரஷாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் அரசியல் திட்டம்…

Comments Off on பிரஷாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் அரசியல் திட்டம்…

பிரசாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் பக்கா திட்டம் எங்க. அடிக்கணுமோ சரியா அங்க அடித்திருக்கிறார். ரஜினி கட்சி தொடங்குவார், தொடங்கமாட்டார் என பல்வேறு விவாதங்கள் பொது தளங்களில் தொடர்ந்து விவாத பொருளாக இருந்து வந்தது ரஜினி கட்சி தொடங்கவே மாட்டார் என ஒரு தரப்பும், ரஜினி கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர். இந்நிலையில் ரஜினி தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும், […]

Continue reading …

பதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதிமாறன்

Comments Off on பதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதிமாறன்

ரஜினி கட்சியின் அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்ததாக வெளியான செய்திக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் புத்தாண்டு 2021 -ல் முதல் தேதி அன்று கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினி நேற்று அறிவித்தார். மேலும் பாஜகவின் அறிவுசார்பிரிவின் தலைவராக உள்ள அர்ஜூன மூர்த்தியை தனது கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நடிகர் ரஜினி நியமித்துள்ளார்.மேலும், தனது கட்சியில், தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். […]

Continue reading …

திமுகவினர் அச்சப்படும் அளவு முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்

Comments Off on திமுகவினர் அச்சப்படும் அளவு முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பென்னாலூர்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய சிறுணியம் பலராமன், திமுகவினர் பயப்படும் அளவுக்கு, முதலமைச்சர் சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், கொரோனாவை விரட்டி அடித்த ஒரே முதல்வர் எடப்பாடியார் என்று தமிழகம் வந்த உள்துறை அமைச்சரே, முதல்வரை பாராட்டியதாகவும் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து […]

Continue reading …

உதயநிதி மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!!!

Comments Off on உதயநிதி மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!!!

திமுகவில் பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் முன் கைகட்டி நிற்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சிகளின் குடிநீர் திட்டத்துக்காக தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டுவரும் பணியை அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குடிநீர் கொண்டுவரும் திட்டம் 440 கோடி செலவில் தாமிரபரணியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள். திமுகவில் மட்டுமே நேரடியாக பதவிக்கு வருகிறார்கள். சிவகாசியில் […]

Continue reading …

முன்னாள் IAS அதிகாரிக்கு சம்பளம் கமல் கட்சியில் சலசலப்பு

Comments Off on முன்னாள் IAS அதிகாரிக்கு சம்பளம் கமல் கட்சியில் சலசலப்பு

முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சந்தோஷ் பாபு, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு பொதுச் செயலாளர் (தலைமைஅலுவலகம்)என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் பாபு,1995 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார். கிருஷ்ணகிரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர். தமிழக தகவல் தொழில்நுட்பத் […]

Continue reading …

முதல்வர் வருகை எதிரொலி தேர்தல் தேதி அதிரடி மாற்றம்!!

Comments Off on முதல்வர் வருகை எதிரொலி தேர்தல் தேதி அதிரடி மாற்றம்!!

சிவகங்கைக்கு முதல்வர் பழனிசாமி வருவதையொட்டி டிச.4-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் டிச.11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயகக் கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சம பலத்தில் உள்ளன. இந்நிலையில் ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட […]

Continue reading …