இன்று சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் டில்லியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையிலடைத்தனர். இதுகுறித்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்று நீதிமன்றம் கூறியது. இவ்வழக்கில் ஏற்கனவே […]
Continue reading …ஓட்டு கேட்டு எந்தக் கட்சியினரும் கிராமத்திற்கு வர வேண்டாம் என்று திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே என்று மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தேர்தலின்போது மக்கள் வேட்பாளர்களிடமும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கும் விஷயம். ஆனால், அது குறைகின்றபோதும், நிவர்த்தி செய்யப்படாதபோதும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. மலைவாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ […]
Continue reading …இன்று தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஆர்த்தி. இவர் தனுஷின் “படிக்காதவன்” உட்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார். நடிகை ஆர்த்தி கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவிற்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி அரசியலில் இருந்தும் விலகி இருந்தார். தற்போது திடீரென அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் […]
Continue reading …சமோசாவில் மாட்டுக்கறி கலந்து விற்பனை செய்த ஐந்து பேர் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் வதேரா பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் மாட்டு இறைச்சி சேர்ந்து விற்பனை செய்ததற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தயாரித்த சமோசா பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர் ஆய்வு முடிவில் சமோசாவில் மாட்டு இறைச்சி கலந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடமை உரிமையாளர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில் […]
Continue reading …அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என பேசியுள்ளார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரித்து துரைமுருகன் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார், இன்று அவர் செய்தியாளர்களிடம், “நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளார்கள், பிரதமர் தமிழகத்திற்கு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக […]
Continue reading …டில்லி நீதிமன்றம் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் காவல் ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கவிதவை 10 நாட்கள் காவலில் […]
Continue reading …எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. மறைந்த ஆர்.எம். வீரப்பன் அரசியல் மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் திகழ்ந்தவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 98வது வயது பிறந்தநாளை ஆர்.எம்.வீரப்பன் கொண்டாடினார். தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
Continue reading …சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போடப்பட்ட சீல் அகற்றப்பட்டது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் 2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சோதனைக்கு பின்பு அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் […]
Continue reading …வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் மாற்று கட்சியை தாக்கி, விமர்சித்து பிரசாரத்தில் பேசி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கும்பகோணத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]
Continue reading …