Home » Archives by category » அரசியல் (Page 49)

விஜய் கட்சியின் முதல் உறுப்பினர் யார்?

Comments Off on விஜய் கட்சியின் முதல் உறுப்பினர் யார்?

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் துவங்கவுள்ளது. நடிகர் விஜய் தன்னை முதல் உறுப்பினராக இணைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி […]

Continue reading …

போதைப்பொருள் புழக்கம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Comments Off on போதைப்பொருள் புழக்கம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், முதலமைச்சர் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்துள்ளார். ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். போதை பொருள் தொடர்புடைய 2138 வழக்குகளில் 148 பேர் தான் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற வழக்குகளின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு […]

Continue reading …

மதிமுகவுக்கு 1+1 வழங்க திமுக திட்டம்!

Comments Off on மதிமுகவுக்கு 1+1 வழங்க திமுக திட்டம்!

திமுக மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநில உறுப்பினர் பதவியும் வழங்க முன்வந்துள்ளது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும், தனிச்சின்னத் தில்தான் போட்டியிடுவோம் என்றும் திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்திருந்தது. ஆனால் திமுக தரப்பிலோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி வந்தனர். இதனால் […]

Continue reading …

திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

Comments Off on திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

திமுக விசிக இடையே மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று மதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் […]

Continue reading …

திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்!

Comments Off on திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்!

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். திடீரென அவர் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது ஆரணியில் போட்டியிடப் போவதில்லை என்றும் மீண்டும் வேலூரில் தான் போட்டியிட போவதாகவும் மன்சூர் அலிகான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர், “ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற […]

Continue reading …

பொன்முடி மகனுக்கு சீட் இல்லையா?

Comments Off on பொன்முடி மகனுக்கு சீட் இல்லையா?

பொன்முடி மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. அவ்வகையில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க திமுக முன் வந்திருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. […]

Continue reading …

தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி தெரிவித்த ஆ.ராசா!

Comments Off on தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி தெரிவித்த ஆ.ராசா!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நீலகிரி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை போட்டியிடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆ.ராசா, நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வேன் என்றும் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ. ராசா போட்டியிட்டு வென்றார். 2009ம் ஆண்டு அவர் […]

Continue reading …

திமுக விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

Comments Off on திமுக விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

திமுகவினர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விருப்ப மனுக்களை, மார்ச் 1ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு […]

Continue reading …

அதிமுகவில் இணைந்த திமுக வேட்பாளர்!

Comments Off on அதிமுகவில் இணைந்த திமுக வேட்பாளர்!

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் அக்கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அவரை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து வரவேற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்பி சற்குண பாண்டியனின் மகள் சிம்லா முத்து […]

Continue reading …

தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பின் நிலவரம் என்ன?

Comments Off on தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பின் நிலவரம் என்ன?

இந்தியா டிவி கருத்துக்கணிப்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் அதேபோல் 100 தொகுதிகளையும் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதில் இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் […]

Continue reading …