Home » Archives by category » அரசியல் (Page 56)

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா?

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா?

விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், ஆம் ஆத்மி, அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன. டில்லி அமைச்சர் சவுரவ் பரத்வாத் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இக்கூட்டணியில் தொடரக் கூடாது என அழுத்தக் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று டில்லி […]

Continue reading …

விஜய்க்கு ஆலோசனை கூற மாட்டேன்; பிரசாந்த் கிஷோர்!

Comments Off on விஜய்க்கு ஆலோசனை கூற மாட்டேன்; பிரசாந்த் கிஷோர்!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் நேரில் வந்து கேட்டுக் கொண்டாலும் அவருக்கு அரசியல் ஆலோசனை கூற மாட்டேன் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரம் நெருங்கிவிட்டால் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட அரசியல் ஆலோசகர்களுக்கு மவுசு அதிகமாகிவிடும். பல அரசியல் கட்சிகள் அவர்களை அணுகி கோடிகளில் பணத்தை கொட்டி கொடுத்து ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள். வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட இருக்கும் நிலையில் அவருக்கு பிரசாந்த் கிஷோர் […]

Continue reading …

பாஜக – பாமக கூட்டணி உறுதி!

Comments Off on பாஜக – பாமக கூட்டணி உறுதி!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அன்புமணிக்கு அமைச்சர் பதவி தர பாஜக ஒப்பு கொண்டுள்ளதால் இரு கட்சிகளும் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அன்புமணியிடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது இந்த முறை பாமகவுக்கு கண்டிப்பாக ஒரு மத்திய அமைச்சர் பதவி தருகிறோம் எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் […]

Continue reading …

2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Comments Off on 2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பயணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு வருகிறார். பிப்ரவரி 27ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபின், 28ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் […]

Continue reading …

பிரதமர் மோடி குறித்து நடிகர் கிஷோர் ஆவேசம்!

Comments Off on பிரதமர் மோடி குறித்து நடிகர் கிஷோர் ஆவேசம்!

பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு அளிக்க வேண்டாம் என நடிகர் கிஷோர் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தை ஒடுக்க ஹரியானா அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகர் கிஷோர் “நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகள் பேரணியை டில்லிக்கு நுழைய விடாமல் தடுத்து வரும் காவல்துறையினருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடிக்கும் […]

Continue reading …

வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Comments Off on வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விவசாயிகளுக்கு அதிமுக செய்தது என்ன? திமுக செய்யாதது என்ன? என விமர்சித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம், “வேளாண்மை துறை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் ஒன்றாக சேர்த்து ஊரகத்துறை வனத்துறை மீன்வளத்துறை, பால் வளத்துறை. அனைத்தையும் ஒன்றாக நினைத்து வேளாண் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள் வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் […]

Continue reading …

அடுத்தாண்டு முதல் இரண்டுமுறை பொதுத்தேர்வு!

Comments Off on அடுத்தாண்டு முதல் இரண்டுமுறை பொதுத்தேர்வு!

மத்திய அமைச்சர் விரைவில் ஆண்டிற்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பாஜக ஆட்சி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான நடந்து வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. தற்போது ஆண்டிற்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருமுறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இனி, ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 2025 -2026ம் கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படும் என மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி […]

Continue reading …

அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் KYN செயலி!

Comments Off on அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் KYN செயலி!

புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் Dr.பழனிவேல் தியாகராஜன் KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் Dr. PTR […]

Continue reading …

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

Comments Off on செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஜூன் 14ல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 16ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் […]

Continue reading …

வேளாண் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கருத்து!

Comments Off on வேளாண் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கருத்து!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேளாண் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இன்று விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று வருகின்றன. வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவுமில்லை, வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. […]

Continue reading …