
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேளாண் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இன்று விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று வருகின்றன. வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவுமில்லை, வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. […]
Continue reading …
சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் முதல் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து கடந்த 14ம் தேதி ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை சோனியா காந்தி தாக்கல் செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு […]
Continue reading …
உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 30ம் சண்டீகர் மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்கு […]
Continue reading …
தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா எச்சரிக்கை. கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகை த்ரிஷா ஆவேசம். கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை பார்ப்பது அருவருப்பானது – நடிகை த்ரிஷா.
Continue reading …
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு காங்கிரஸ் மேலிடம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜயதாரணி பாஜகவில் இணையுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி டில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டில்லியில் உள்ள விஜயதாரணி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று […]
Continue reading …
சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடந்தாண்டு கரூர் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ஒருவர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் போது, ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சிப்பது நல்லதல்ல” என்று தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி நடிகை கௌதமி உட்பட ஒரு சிலர் அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித் அவர், “தேர்தலின் போது ஒரு சிலர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு செல்வது சகஜம் தான். உறுதியளித்தபடி ராஜபாளையத்தில் சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து […]
Continue reading …
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுடன் தேமுதிக அல்லது அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று இரு தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக […]
Continue reading …
டில்லியில் இன்று பாஜகவின் இரண்டு நாள் தேசிய கவுன்சிலர் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்து 11,500 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றது. இதையொட்டி பாஜக இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. […]
Continue reading …
மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். நிகழ்ச்சியில் துரை வைகோ, “தேர்தல் பத்திரம் மூலமாக தேர்தல் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜக விற்கு கொடுத்துள்ளதாகவும் தேர்தல் பத்திரம் கொடுப்பது செல்லாது எனவும் 2018 முதல் இன்று வரை பெறபட்ட நிதியை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அரசுக்கு கொடுத்திருக்க கூடிய சம்மட்டி […]
Continue reading …