Home » Archives by category » அரசியல் (Page 58)

தமிழகம் வரும் பிரதமர் மோடி; தேதியில் மாற்றம்!

Comments Off on தமிழகம் வரும் பிரதமர் மோடி; தேதியில் மாற்றம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி பற்றிய விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வருகிற 25-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளதாக பா.ஜ.க. கட்சித் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்காக தமிழகம் முழுதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் […]

Continue reading …

முன்னாள் எம்.எல்.ஏவை ஏமாற்றிய போலி அமித்ஷா!

Comments Off on முன்னாள் எம்.எல்.ஏவை ஏமாற்றிய போலி அமித்ஷா!

மத்திய அமைச்சர் அமித்ஷா போல பேசி முன்னாள் எம்.எல்.ஏவிடம் மர்ம கும்பல் பேசி பண மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த கிஷன்லால் உத்தர பிரதேசத்தில் கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தவர். சமீபத்தில் கிஷன்லாலுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனவும், நாடாளுமன்ற தேர்தலில் கிஷன்லாலுக்கு எம்.பி சீட் தர தயாராக உள்ளதாகவும், அதற்கு அவர் சில லட்சங்கள் தர வேண்டும் […]

Continue reading …

கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் யார்?

Comments Off on கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் யார்?

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், கன்னியாகுமரி தொகுதிக்கு பெண் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இணை அமைச்சரானார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜக தேசிய தலைமை அவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக […]

Continue reading …

அதிமுகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை தோல்வி!

Comments Off on அதிமுகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை தோல்வி!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அதிமுகவை எப்படியாவது பாஜக கூட்டணிக்கு கொண்டுவர தீவிர முயற்சி செய்தார். அதிமுக பிடிவாதமாக பாஜகவுடன் கூட்டணியில்லை என உறுதிபட கூறிவிட்டது. அடுத்த கட்டமாக பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமாக கட்சி இணைய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாகவும் அதையடுத்து மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியை பாஜக கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை ஜிகே வாசன் எடுப்பார் என்றும் அதன் […]

Continue reading …

தேசிய அரசியலில் களமிறங்குகிறாரா பிரியங்கா?

Comments Off on தேசிய அரசியலில் களமிறங்குகிறாரா பிரியங்கா?

பிரியங்கா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசியல் செய்து கொண்டிருந்தார். தற்போது தேசிய அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதுமட்டுமின்றி அவர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் தேசியளவில் பிரபலமாக இருக்கும் ஒரு முகத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் பிரியங்கா காந்தியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருந்த […]

Continue reading …

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்!

Comments Off on திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்!

ஊடகங்களில் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஐந்து தொகுதிகள், புதுவையை சேர்த்து ஆறு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்பதை திமுக பிடிவாதமாக இருப்பதால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை கொடுத்த 10 தொகுதியாவது கொடுக்க வேண்டும் என்றும் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாராளுமன்றத் […]

Continue reading …

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு!

Comments Off on அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு!

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் இன்னும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் இந்த முறை கண்டிப்பாக அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய […]

Continue reading …

அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி.

Comments Off on அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி.

அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி.   நடிகை கவுதமி  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில்,  நடிகை கவுதமி  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

Continue reading …

மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு!

Comments Off on மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு!

மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இச்செயலை கண்டித்து வரும் 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் இராமேஸ்வரத்தில், கழக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக அறிவிப்பில், “கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர் 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. […]

Continue reading …

திமுகவில் இணைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

Comments Off on திமுகவில் இணைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தூத்துகுடி மாவட்ட நிர்வாகி திடீரென திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் என்பது தமிழக வெற்றி கழகமாக மாறி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் அப்படியே தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளாக மாறுவார்கள் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துகுடி […]

Continue reading …