Home » Archives by category » அரசியல் (Page 93)

அதிமுகவுக்கு இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ!

Comments Off on அதிமுகவுக்கு இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ!

அதிமுகவுக்கு இனி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியே கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் சமீபத்தில் அதிமுக பிரமாண்டமான மாநாடு நடந்தது. இன்று அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், “மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான், இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கூடிய கூட்டத்தை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, […]

Continue reading …

திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

Comments Off on திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார்” என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஆளுநரைப் பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை, ஆளுநரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு. ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? பாம்பிடம் சீண்டுவது போல், திமுக […]

Continue reading …

ஓமந்தூரார் மருத்துவமனை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Comments Off on ஓமந்தூரார் மருத்துவமனை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தலைமை செயலக ஊழியர்கள் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை சட்டமன்றமாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு அக்கட்டிடத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை கட்டிடத்தை சட்டமன்றமாக மாற்றப்பட வேண்டும் என்று தலைமைச் செயலக […]

Continue reading …

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் பட்டியல் எப்போது?

Comments Off on கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் பட்டியல் எப்போது?

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று திமுக தேர்தலுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தது அதுமட்டுமின்றி அதற்கான விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் முதல் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பம் கொடுத்தவர்களிடம் […]

Continue reading …

விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

Comments Off on விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சாலைவிபத்தில் உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து […]

Continue reading …

தேசிய கொடியில் கவனமாக இருந்த மோடி

Comments Off on தேசிய கொடியில் கவனமாக இருந்த மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அமைப்பின் சார்பில் 15வது உச்சி மாநாடு ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில், நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுடன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒன்றாக […]

Continue reading …

மருத்துவமனையில் தகராறு செய்த மேயர்

Comments Off on மருத்துவமனையில் தகராறு செய்த மேயர்

தற்போது உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக மேயர் சுஸ்மா கார்வெல், லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை வருகை தந்தார். அங்குள்ள ஐசியு அறைக்குள் ஷூ அணிந்துகொண்டு நுழையும்போது, பணியாளர்கள் அவரை தடுத்ததாகவும், இதில், மேயர் மற்றும் பணியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், மருத்துவமனை வளாகத்திற்கு ஒரு புல்டோசர் வரவழைக்கப்பட்டதாகவும், இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகிறது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் மேயர் […]

Continue reading …

காவிரி விவகாரம் குறித்து துணை முதலமைச்சர் கருத்து!

Comments Off on காவிரி விவகாரம் குறித்து துணை முதலமைச்சர் கருத்து!

கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடக மாநிலத்தில் ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசும் போது, “கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் […]

Continue reading …

உரிமைத் தொகை திட்டத்திற்கு முகாம்கள் நிறைவு!

Comments Off on உரிமைத் தொகை திட்டத்திற்கு முகாம்கள் நிறைவு!

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாகவும், மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்ததாகவும் அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2 கட்டங்களாக நடந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் […]

Continue reading …

சைலேந்திரபாபு பதவியை ஆளுனர் நிறுத்திவைப்பு!

Comments Off on சைலேந்திரபாபு பதவியை ஆளுனர் நிறுத்திவைப்பு!

ஆளுனர் தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரை பரிந்துரை செய்ததை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் […]

Continue reading …