Home » Archives by category » இந்தியா

ஜெய்ஷாவைப் பாராட்டிய பிரகாஷ் ராஜ்?

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம். இப்பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் நிற்காததால் அவர் […]

பூகா கேத்கர் மனு தாக்கல்!

Comments Off on பூகா கேத்கர் மனு தாக்கல்!

ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் என்னை தகுதி நீக்கம் செய்ய யுபிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை என டில்லி உயர்நீதிமன்றத்தில் போலீஸ் சான்றிதழ் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்துள்ளார். பூஜா கேத்கர் போலி ஓபிசி சான்றிதழ், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், பெயர் மாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா கேத்கர் மனு தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு […]

Continue reading …

இமாச்சலில் மசோதா நிறைவேற்றம்!

Comments Off on இமாச்சலில் மசோதா நிறைவேற்றம்!

இமாச்சலப் பிரதேச அரசு ஆண்களுக்கு நிகராக பெண்களுடைய சராசரி திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. சுக்விந்தர் சிங் சுகு இமாச்சல் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக உள்ளார். கடந்த 2023 டிசம்பரில், பாலின சமத்துவத்தை பேணும் வகையில் பெண் குழந்தைகளின் திருமண வயதை அதிகரிப்பு குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு சமீபத்தில் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தது. இமாச்சல் மாநில சட்டசபையில் பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்தும் […]

Continue reading …

தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் துவங்கி வைக்கும் பிரதமர்!

Comments Off on தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் துவங்கி வைக்கும் பிரதமர்!

ஏற்கனவே தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் சில இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் சென்னையிலிருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் ஆகியவை இயங்கி வருகிறது. தற்போது மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளன. […]

Continue reading …

கங்கனா ரனாவத் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

Comments Off on கங்கனா ரனாவத் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக பேசி வரும் கங்கனா, முன்னதாக டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து பேசியுள்ளார். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த பெண் ஒருவர் கங்கனாவை அதற்காக அறைந்த […]

Continue reading …

மகாராஷ்டிராவில் சிறுமி வன்கொடுமை!

Comments Off on மகாராஷ்டிராவில் சிறுமி வன்கொடுமை!

ஏற்கனவே மகாராஷ்டிராவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பேசும் பொருளாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூரமான செயல் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பத்லாபூரில் நர்சரி ஸ்கூல் படிக்கும் சிறுமிகளை பள்ளி துப்புரவு தொழிலாளி வன்கொடுமை செய்த சம்பவம் தேசியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றொரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆபாசப்படங்களை மாணவிகளுக்கு காட்டி பாலியல் சீண்டலில் […]

Continue reading …

சர்ச்சையை கிளப்பி வரும் சுரேஷ் கோபி!

Comments Off on சர்ச்சையை கிளப்பி வரும் சுரேஷ் கோபி!

சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என தெரிவித்திருத்துள்ளார். பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒருவர். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட மறுநாளே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. திருவனந்தபுரத்தில் கேரள திரைப்பட வர்த்தக சபையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிப்பதால் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை […]

Continue reading …

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததால் 14 இந்தியர்கள் பலி!

Comments Off on நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததால் 14 இந்தியர்கள் பலி!

இந்தியர்கள் 14 பேர் நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இன்று உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று நேபாளத்தின் பிரபல சுற்றுலா தலமான பொக்காரா நகரிலிருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி பயணித்து கொண்டிருந்தது. தனாஹுன் மாவட்டத்துக்குட்பட்ட ஐனா பஹாரா என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மர்சங்டி ஆற்றில் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தை நேபாள காவல் துறை […]

Continue reading …

திருப்பதியில் கிலோ கணக்கில் நகையுடன் வழிபட்ட குடும்பம்!

Comments Off on திருப்பதியில் கிலோ கணக்கில் நகையுடன் வழிபட்ட குடும்பம்!

  கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுவாமியை தரிசனம் செய்தனர். நாள்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சன்னி, சஞ்சய், பிரீத்தி ஆகிய விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர். அதில் ஆண்கள் இருவரும் தங்களது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். உடன் […]

Continue reading …

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.98 லட்சம் அபராதம்!

Comments Off on ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.98 லட்சம் அபராதம்!

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் போதிய பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதாக எழுந்து புகாரில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சமீப காலமாக ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அவ்வகையில், சில தினங்களுக்கு முன் லண்டனில் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், நேற்று மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் […]

Continue reading …
Page 1 of 179123Next ›Last »