Home » Archives by category » இந்தியா (Page 105)

உத்தரபிரதேசத்தில் சிறுமிக்கு வன்கொடுமை!

Comments Off on உத்தரபிரதேசத்தில் சிறுமிக்கு வன்கொடுமை!

உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தன்னை அடித்த சிறுமியை வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடண்டா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அச்சிறுமி பள்ளி செல்லும் வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு அவரை பாலியல்ரீதியாக சீண்டுவதும், வம்பு இழுப்பதுமாக இருந்துள்ளனர். ஒருநாள் அதுபோல தன்னை சீண்டிய தினேஷ் யாதவ் என்ற […]

Continue reading …

மருத்துவர் செய்த மகத்தான செயல்!

Comments Off on மருத்துவர் செய்த மகத்தான செயல்!

பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 3 கிமீ ஓடியே சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் நந்தகோபால் தான் ஓட்டிச்சென்ற காரை நிறுத்தி ஓடியே மருத்துவமனைக்கு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவர் நந்தகோபால் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் டிராபிக்கில் சிக்கி கொண்டதை அடுத்து அவர் பதட்டமானார். மருத்துவமனை இன்னும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த […]

Continue reading …

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்!

Comments Off on திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்!

ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க திருப்பதி மலைப்பாதையில் மின்சார பஸ்கள் இயக்க அனுமதி அளித்துள்ளார். திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். அதிகமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், கால விரயத்தை குறைக்கவும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன. மக்கள் அதிக அளவில் வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில […]

Continue reading …

நுகர்வோர் ஆணையம் எஸ்பிஐ வங்கிக்கு அபராதம்

Comments Off on நுகர்வோர் ஆணையம் எஸ்பிஐ வங்கிக்கு அபராதம்

நுகர்வோர் ஆணையம் எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹலியாலில் கன்னட மொழியில் காசோலையில் எழுதப்பட்ட காரணத்தினால் காசோலையை எஸ்பிஐ வங்கி நிராகரித்தது. அந்த வாடிக்கையாளருக்கு ரூபாய் 177 அபராதம் விதித்து எஸ்பிஐ வங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து அந்த எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் உரிமை ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார். இதுபற்றி விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில் கன்னட மொழியில் எழுதப்பட்ட காசோலையை நிராகரித்ததற்காக எஸ்பிஐ வங்கிக்கு […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்து!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்து!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக கேரள மக்களுக்கு மலையாளத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் கேரளாவில் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக கேரள மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் ஓணம் கொண்டாடும் கேரள மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மலையாளத்தில் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள்! ஓணம் பண்டிகை புதிய […]

Continue reading …

இவ்வாண்டும் டில்லியில் பட்டாசுக்கு தடை!

Comments Off on இவ்வாண்டும் டில்லியில் பட்டாசுக்கு தடை!

டில்லி அரசு 5வது ஆண்டாக இவ்வாண்டும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து அறிவித்துள்ளது. தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் மனிதர்கள் வாழ முடியாத இடமாக டில்லி மாறி வருகிறது. இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு வாகன போக்குவரத்தை குறைத்தல் உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை டில்லி அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள டில்லி சுற்றுசூழல்துறை அமைச்சர் […]

Continue reading …

மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

Comments Off on மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப் “என்னை விட மோடியின் சிறந்த நண்பர் யாருமில்லை” என்று கூறியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் அரசியல்வாதி மட்டுமின்றி அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் அமெரிக்க பிரதமராக இருக்கும்போது, கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து கவுரவித்தார். 2021ல் அவர் இரண்டாம் முறை […]

Continue reading …

உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு!

Comments Off on உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு!

உச்ச நீதிமன்றம் இனிமேல் காகிதமில்லா நடைமுறை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்து, ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 49வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் இந்திய அரசியலமைப்பு அமர்வில் இனிமேல் காகிதமில்லா நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அங்குள்ள வழக்கறிஞர்களுக்கும், தொழில் நுட்பப்பயிற்சி அளிக்கப்படும் என்றும், காகிதக் கட்டுகளுக்குப் பதில் வழக்கு விவரங்களை ஸ்கேன் […]

Continue reading …

மூக்கு வலி செலுத்தும் மருந்து அறிமுகம்!

Comments Off on மூக்கு வலி செலுத்தும் மருந்து அறிமுகம்!

இந்தியாவில் கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உட்பட தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டம் மூலமாக நாடு முழுவதும் 150 கோடி டோஸுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போல் அல்லாமல் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா […]

Continue reading …

நர்சிங் மாணவி தற்கொலை!

Comments Off on நர்சிங் மாணவி தற்கொலை!
நர்சிங் மாணவி தற்கொலை!

நர்சிங் மாணவி ஒருவர் தனக்கு தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் நர்சிங் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு தூக்கம் வராதது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நர்சிங் மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவி எழுதிய […]

Continue reading …