
2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி கடந்த ஆண்டைவிட 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளது. நாட்டில் 1.43 லட்சம் கோடியை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூலை எட்டியுள்ளது. மேலும் தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் இந்த சாதனையை படைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து வருகிறது. இந்த கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் சற்றுமுன் […]
Continue reading …
ஜார்க்கண்ட்டில் பாஜக நிர்வாகி கொடூரத்தின் உச்சத்தை நிகழ்த்தியுள்ளார். வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை பாஜக நிர்வாகி சீமா பத்ரா கொடூரமாக டார்ச்சர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் மகளிர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சீமா பத்ரா. இவரது வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வீடியோவில் தான் சந்தித்த கொடுமைகளை பகிர்ந்துள்ளார். வீடியோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் தெரிகிறது. அதில் அந்த […]
Continue reading …
யுஜிசி இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் நம் நாட்டில் போலியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக் கழகங்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் பல போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதால் பல மாணவர்கள் அதில் பணத்தைக் கட்டிச் சேருவதால் அவர்களின் படிப்புக் காலமும் வீணாகிறது. படிப்பு முடித்த பின் உயர் கல்வியிலோ அல்லது வேலையிலோ சேரும்போதுதான், தாங்கள் படித்த பல்கலை போலி என்பதே தெரிகிறது. யுஜிசி எனும் மத்திய பல்கலை மானியக்குழு இன்று நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தலைநகர் […]
Continue reading …
சாகித்ய அகாடமியின் 2022ம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய மொழிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்படும். அவ்வகையில் 2022ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட மொழிகளில் சிறந்த கவிதை, கட்டுரை, மற்றும் சிறுகதைகளுக்கான விருதுகள் அறிவிக்கபப்ட்டுள்ளது. தமிழில் சிறுவர் இலக்கத்திற்கான பால சாகித்ய புரஸ்கா […]
Continue reading …
மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மேசெஜால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தொடர் தாக்குதல் நடந்தது போல் மீண்டும் ஒரு தொடர் தாக்குதல் நடைபெறும் என மெசேஜ் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பல இடங்களில் ஒரே நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. தாஜ் ஹோட்டல் பல இடங்களில் நடந்த தாக்குதலில் 175 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் […]
Continue reading …
ரிசர்வ் வங்கி இந்தியாவில் கூகுள் பே உட்பட அனைத்து விதமான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பலதரப்பட்ட உணவகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வணிக செயல்பாடுகளுக்கும் ஆன்லைனில் பணம் செலுத்தக்கூடிய கியூஆர் கோடு பலகைகள் வைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் கூகிள் பே. போன் பே, பேடிஎம் உட்பட்ட பல ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக அன்றாடம் மக்கள் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். சிங்கிள் டீ குடிப்பது […]
Continue reading …
கேரளாவில் நண்பரின் மகளை கூட்டு பலாத்காரம் செய்த கஞ்சா கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் திரிச்சூர் மாவட்டம் புன்னயூர்குளம் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியின் மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக மாணவியின் தாயார் அடிக்கடி மலப்புரம் வரை சென்று வந்துள்ளார். அதனால் தனது கணவரின் கூட்டாளிகளிடம் தனது […]
Continue reading …
இன்றைய இளைய தலைமுறையினர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது பீட்சா. பீட்சாவிற்கான உணவுப் பொருட்களை கழிவறைக்கு அருகில் வைத்திருந்ததாக ஹோட்டல் நிர்வாகம் மீது கண்டனம் குவிந்துள்ளது. ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்களின் விருப்ப உணவாக மாறியுள்ளது பீட்சா. இந்தப் பீட்சாவுக்கு என பிரத்யேக நிறுவனங்கள், ஹோட்டல்களில் மக்கள் குவிகின்றனர். இந்தக் கொரோனா காலத்தில், இது ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, சோமோட்டா, ஓலா, ஓபர் உட்பட நிறுவனங்கள் மூலம் […]
Continue reading …
ஓலா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது. தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவின் பெட்ரோல்- டீசல் விலைவாசி உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் இதற்கு மாற்று வழியை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வகையில், டாடா, ஹூண்டாய், டெஸ்லா, ஓலா போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரி வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. முன்னணி எலெக்ட்ரிக் நிறுவனமான ஓலா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஒருமுறை […]
Continue reading …
தலைநகரான டில்லியில் வெடிபொருட்களை கொண்டு சென்ற 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுந்திரம் அடைந்த 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ஒட்டுமொத்த இந்திய மக்களும் தங்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படியும், தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள புரோபைல் டிபியில் தேசிய கொடி வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் முதற்கொண்டு […]
Continue reading …