
உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவரை சாமி படம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள பேப்பரில் இறைச்சியை மடித்து கொடுத்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் சாம்பல் பகுதியில் தலிப் ஹுசைன் என்பவர் கறிக்கடை மற்றும் மெஹாக் என்னும் உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் விற்கப்படும் கறியை பார்சல் செய்வதற்கு திட்டமிட்டே இந்து கடவுள்கள் உள்ள நாளிதழ்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. பலரும் அவர் இந்து கடவுள் படம் உள்ள பேப்பரில் கறி மடிக்கும் போட்டோவை […]
Continue reading …
அந்தமான் அருகே தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். அந்தமான் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்று காலை முதல் திடீரென அடிக்கடி ஐந்து முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை 11 மணி, பிற்பகல் 1.55, 2.06, 2.37 மற்றும் 3.02 ஆகிய மணி நேரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் அருகே நடுக்கடலில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் சுனாமி ஏற்படும் […]
Continue reading …
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனக்கு பெரிய பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்சியின் மீது மட்டும்தான் எனக்கு ஆர்வம். எனக்குப் பெரிய பதவி எதுவும் வேண்டாமென முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஒரு தனியார் டிவி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, “மத்திய அரசு மஹாராஷ்டிராவில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. தற்போது அரசு பழிவாங்கும் செயலில் […]
Continue reading …
பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவரை மத்திய பிரதேச மாநிலத்தில் தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின குடும்பத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த நிலத்தை 3 பேர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்நிலையில், ராம்பியாரி சஹாரியா அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேர், ராம்பியாரி சஹாரியாவை அவரது வயலில் வைத்து தீயிட்டு […]
Continue reading …
மத்திய அரசு உணவகங்களில் சேவை கட்டணம் ஏதும் விதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான உணவகங்களில் சேவை கட்டணம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வசூலிக்கப்படுகிறது. இப்படி வசூலிக்கப்படும் எந்த சேவை கட்டணமும் அரசுக்கு செல்வதில்லை. சேவை கட்டணத்தை உணவகங்களில் வசூலிக்கக்கூடாது என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதையும் மீறி பல உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவகங்களில் ஓட்டல்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது. அப்படி வசூலித்தால் 1915 என்ற எண்ணிற்கு […]
Continue reading …
வணிகர்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்வது என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது. மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து விதமான ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று அறிவித்திருந்தது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது. இதையடுத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த வணிகர்கள் […]
Continue reading …
இன்று பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் பூரி ஜெகந்நாதர் கோவிலில் நடைபெறும் ரத யாத்திரையை காண ஒடிசாவில் குவிந்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஜெகந்நாதர் கோவிலில் நடைபெறும் ரதயாத்திரையை காண பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் வருவது வழக்கம். இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரை தொடங்குகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் பூரியில் குவிந்துள்ளனர். தேரை வடம்பிடித்து இழுக்க மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொள்ளும் நிலையில் இடையூறுகள் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Continue reading …
மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்வதற்கான செலவு ரூ.62 கோடி ஆகிறது என்று தகவல் அளித்துள்ளது. 2021-2022ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் உள்ள இரு அவை உறுப்பினர்களும் ரயில்களில் பயணித்த செலவு பற்றிய விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு எம்.பிக்களுக்கு முதல் வகுப்பு ஏசி பெட்டியிலும், முன்னாள் எம்.பிக்களுக்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியிலும் இலவசமாக பயணிக்க அனுமதி உள்ளது. இதற்கான கட்டணத்தை மத்திய அரசு ரயில்வேக்கு செலுத்தும். அவ்வகையில் கடந்த 5 ஆண்டுகளில் […]
Continue reading …
உச்சநீதிமன்றம் நுபுர் சர்மா தான் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு பொறுப்பு என்று அறிவித்துள்ளது. இன்று உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்து குறித்த வழக்கை விசாரித்தது. பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நாடு முழுவதும் வெவ்வேறு நீதிமன்றங்களிலும் […]
Continue reading …
தேர்தல் ஆணையம் குடியரசு தலைவர் தேர்தலுக்காக கொடுக்கப்பட்டுள்ள மனுவில் 79 மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரபுபதி முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த், சின்ஹா ஆகியோரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டிடுகின்றனர். இத்தேர்தலில் மொத்தம் 87 பேர் போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 79 மனுக்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் […]
Continue reading …