Home » Archives by category » இந்தியா (Page 120)

மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

Comments Off on மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத்  திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு இட ஒதுக்கீடு 1992&ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. […]

Continue reading …

கொரோனா கண்டுபிடிக்கும் புதிய கருவி!

Comments Off on கொரோனா கண்டுபிடிக்கும் புதிய கருவி!

கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு சோதனையின் முடிவு தெரிவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது.   இந்நிலையில் மூன்றே நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் 3 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு சுமார் 160 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் என்றும் […]

Continue reading …

தாதர் விரைவு ரயில் விபத்து!

Comments Off on தாதர் விரைவு ரயில் விபத்து!

புதுச்சேரி தாதர் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு மும்பையின் தாதர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரயில், மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.   இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும், அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழருக்கு உதவிட கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்பட இலங்கை மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப […]

Continue reading …

பஸ் கட்டணத்தை உயர்த்தி ஆந்திர அரசு!

Comments Off on பஸ் கட்டணத்தை உயர்த்தி ஆந்திர அரசு!

ஆந்திர அரசாங்கம் டீசல் விலை உயர்ந்ததால், பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் பேருந்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் விரிவாக கூறியதாவது, “கொரோனாவால் மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை ஆந்திரா அரசு போக்குவரத்து கழக வருவாயில் ரூ.5,680 கோடி சரிவு ஏற்பட்டது. டிக்கெட் விலை கடைசியாக 11 டிசம்பர் 2019 அன்று […]

Continue reading …

இசைஞானி பிரதமருக்கு புகழாரம்!

Comments Off on இசைஞானி பிரதமருக்கு புகழாரம்!

இசைஞானி இளையராஜா பாரத பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானவர் என்று புகர்ந்துள்ளார். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளைப் பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தத புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு விருது!

Comments Off on பிரதமர் மோடிக்கு விருது!

பிரதமர் மோடிக்கு மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த லதா மங்கேஷ்கரின் தந்தையின் நினைவு நாள் நினைவு நாளான ஏப்ரல் 20-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. லதா மங்கேஷ்கரின் சகோதரி உஷா மங்கேஷ்கர் இந்த விருதினை வழங்க உள்ளார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் அரும்பணி ஆற்றிய நபருக்கு இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு முதல் விருது […]

Continue reading …

மோட்டோ ஜி22 வெறும் 10 ஆயிரமா?

Comments Off on மோட்டோ ஜி22 வெறும் 10 ஆயிரமா?

இன்று முதல் இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ ஜி22 சிறப்புகளை பார்ப்போம்… * 6.53 இன்ச் 90Hz டிஸ்பிளே, * 1.8GHz ஆக்டோ கோர் MediaTek Helio G37 பிராசஸர், * xA53 2.3GHz + 4xA53 1.8GHz இல் ஆக்டா-கோர் CPU * 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் * 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, * 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் குவாட் […]

Continue reading …

பள்ளி மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

Comments Off on பள்ளி மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

பள்ளி மாணவிகள் தோப்புகரணம் போட்டதால் மயங்கி விழுந்த சம்பவம் ஒடிஷா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட் நகர் பகுதியில் பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் நடந்துள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் நேற்று பள்ளிக்குத் தாமமதமாக வனந்தனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர் 7 மாணவிகளையும் அழைத்து தாமதமாக வந்ததற்கு 100 தோப்புக்கரணம் போடுமாறு கூறியிருக்கிறார். அந்த மாணவிகளால் தோப்புக் கரணம் போடமுடியவில்லை, ஒரு கட்டத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 7 பேரையும் மருத்துவமனைக்கு […]

Continue reading …

ஜூலை 17ல் நீட் தேர்வு

Comments Off on ஜூலை 17ல் நீட் தேர்வு

தேசிய தேர்வு முகமை இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக நுழைவுத் தேர்வான நீட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், MBBS, BDS உள்ளிட்ட இள நிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEED-UG தேர்வு வரும் ஜூலை மாதம் 17ல் நடைபெறும். ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை தேர்வுக்கான ஆன்லைன் வழி விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ், உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Continue reading …