
படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன், தமிழக மீன்வள இயக்குனர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், […]
Continue reading …
உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலங்கெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி – அரும்பணி. அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன், கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் – பாராட்டுகள்.
Continue reading …
மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. நாடு முழுவதும் 19 கட்சிகளின் சார்பில், வரும் செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை, பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளது. இதில், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதும் […]
Continue reading …
வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த பிரத்யேக தகவலின் அடிப்படையில் 10.09.2021 அன்று அதிகாலை 2:30 மணிக்கு ஈகே-542 எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த 34 வயது பயணி மற்றும் எஃப்இசட்-447 விமானத்தில் 10.09.2021 அன்று காலை 4 மணிக்கு சென்னை வந்த 35 வயது பயணி ஆகியோர் விமான நிலைய வெளி வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது அவர்களது பைகள், பெட்டிகளின் உள்ளே ரூ. 1.33 கோடி மதிப்பில் 3125 கிராம் எடையில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2021) முகாம் அலுவலகத்திலிருந்து, அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில், 8.25 இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனம் ஜப்பான் நாட்டினை தலைமையகமாக கொண்டு, 20-க்கும் […]
Continue reading …
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் நேற்று காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 164.66 கோடி ஆகும். உணவு பதப்படுத்தல் அமைச்சகத்தால் ரூ 27.99 கோடி மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 3100 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ள இந்த திட்டங்கள் மூலம் அவற்றுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் […]
Continue reading …
சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் ஃபோர்டு மகிழுந்து ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையிலான இந்த முடிவு வருத்தமளிக்கிறது, இது திரும்பப்பெறப்பட வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஃபோர்டு மகிழுந்து நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் மகிழுந்து ஆலைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 […]
Continue reading …
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில வாரங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலிபிரி அருகில் உள்ள பூதேவி தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டோக்கன் களை […]
Continue reading …
ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகலரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து உரையாடினார். மக்களின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும்,அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும்அகலரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும்டாக்டர் முருகன் கேட்டுக்கொண்டார். இது பாரம்பரிய […]
Continue reading …
குறிப்பிடத்தக்க சாதனையாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான (1,13,53,571) கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது கடந்த 11-நாட்களில் மூன்றாவது முறையாகும். இன்று காலை 7 மணி நிலவரப்படி, இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 69.90 கோடியைக் (69,90,62,776) கடந்தது. 72,26,439 அமர்வுகள் மூலம் இது சாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மற்றும் விரிவாக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 42,942 நோயாளிகள் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,24,937 […]
Continue reading …