Home » Archives by category » இந்தியா (Page 127)

புதிய ரயில் பாதை திட்டம் : ரயில்வே அமைச்சருடன் எல் முருகன் சந்திப்பு !

Comments Off on புதிய ரயில் பாதை திட்டம் : ரயில்வே அமைச்சருடன் எல் முருகன் சந்திப்பு !

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகலரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து உரையாடினார். மக்களின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும்,அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும்அகலரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும்டாக்டர் முருகன் கேட்டுக்கொண்டார். இது பாரம்பரிய […]

Continue reading …

69.90 கோடியைக் கடந்தது கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை !

Comments Off on 69.90 கோடியைக் கடந்தது கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை !

குறிப்பிடத்தக்க சாதனையாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான (1,13,53,571) கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது கடந்த 11-நாட்களில் மூன்றாவது முறையாகும்.  இன்று காலை 7 மணி நிலவரப்படி, இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 69.90 கோடியைக் (69,90,62,776) கடந்தது.  72,26,439 அமர்வுகள் மூலம் இது சாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மற்றும் விரிவாக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 42,942 நோயாளிகள் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,24,937 […]

Continue reading …

கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்!

Comments Off on கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்!

கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் என்றும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளை ஈடுபடுத்தி, உள்ளூர் மொழிகளில், பரவலான மல்டிமீடியா பிரச்சாரங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். 36-வது தேசிய கண் தான இருவார விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அவர், நன்கொடையாளர் திசுக்களின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி பற்றிக் குறிப்பிட்டார்.  […]

Continue reading …

13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு !

Comments Off on 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு !

2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார். இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் மேதகு விளாடிமிர் புதின், சீன அதிபர் மேதகு ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் மேதகு சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், திரு. அஜித் தோவல், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு. மார்கோஸ் ட்ராய்ஜோ, பிரிக்ஸ் வணிக கவுன்சிலின் சார்பு தலைவர் திரு. ஓங்கார் […]

Continue reading …

ரோஷ் ஹஷனாவுக்கு உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

Comments Off on ரோஷ் ஹஷனாவுக்கு உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.   பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியதாவது: “இன்று ரோஷ் ஹஷனாவைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னடுக்கும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.“

Continue reading …

விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்!

Comments Off on விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்!

விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விநாயகர் இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர். அவருடைய அன்பான தன்மையாலும் குணத்தாலும் அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின் […]

Continue reading …

கேஷவ் தேசிராஜு மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

Comments Off on கேஷவ் தேசிராஜு மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரனுமான கேஷவ் தேசிராஜு இன்று காலை மாரடைப்பால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அரசுப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை கொண்டிருந்த மனிதநேயப் பண்பாளராகவும் அவர் திகழ்ந்தார். தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள […]

Continue reading …

சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் – வேல்முருகன்!

Comments Off on சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் – வேல்முருகன்!

சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், எரிவாயு விலையை மேலும் ரூ.25 உயர்த்தி,  ரூ. 902.50 ஆக நிர்ணயம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகையை நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது. ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போததக்குறைக்கு […]

Continue reading …

உலக சாதனை படைத்த சுமித் அண்டில்!

Comments Off on உலக சாதனை படைத்த சுமித் அண்டில்!

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் சுமித் அண்டில். டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 34ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்துள்ளதுடன் தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். […]

Continue reading …

டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

Comments Off on டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி :   தேசிய விளையாட்டு நாளன்று டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்குப் பதக்க மழை பொழிகிறது. உயரம் தாண்டுதல் மற்றும் வட்டு எறிதலில் ஆசிய சாதனையுடன் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள நிஷாத் குமார், வினோத் குமார் ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue reading …