Home » Archives by category » இந்தியா (Page 134)

டிசம்பர் முதல் வாரம் மெரினா கடற்கரை திரப்பு…?

Comments Off on டிசம்பர் முதல் வாரம் மெரினா கடற்கரை திரப்பு…?

டிசம்பர் மாதத்திற்குள் சென்னை மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றம் அதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கும். மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை. மேலும் மெரினாவில் 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. மெரினா லூப் சாலையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது […]

Continue reading …

95% வெற்றி பெற்ற கொரோனா தடுப்பு மருந்து

Comments Off on 95% வெற்றி பெற்ற கொரோனா தடுப்பு மருந்து

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா நோய் தடுப்பு மருந்து 95% வெற்றி என அறிவிப்பு. அமெரிக்காவின் மார்டனா என்ற நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுப்பதில் அமெரிக்க மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Continue reading …

ராஜஸ்தானில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Comments Off on ராஜஸ்தானில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சயினத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வஜி மகாராஜ், எளிய வாழ்கையை வாழ்ந்து, மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றியவர் வாழ்ந்தவர். அவருடைய ஊக்குவிப்பால் பள்ளி கல்லூரிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-ம் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், பாலியில் அமைதிக்கான சிலை’ என்று அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, […]

Continue reading …

புதிதாக பணியில் சேர்ந்தவர்களே உங்களுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது !!!

Comments Off on புதிதாக பணியில் சேர்ந்தவர்களே உங்களுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது !!!

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் புதிய ஊழியர்களுக்கு 24 % ஊதியத்தை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது.கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பல தினசரி கூலி தொழிலாளர்களின் வருவாயில் இழப்பை ஏற்படுத்தியது. குறு மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலர் தங்களது வேலையை இழந்தனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்கள் சுயசார்பு நிலையை எட்டவும்   பல்வேறு தற்சார்பு இந்தியா  திட்டங்களை […]

Continue reading …

10-12 வகுப்பு மாதிரி தேர்வுகள் ரத்து – பானர்ஜி அறிவிப்பு.. !

Comments Off on 10-12 வகுப்பு மாதிரி தேர்வுகள் ரத்து – பானர்ஜி அறிவிப்பு.. !

மேற்கு வங்கத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு மாதிரி இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது,”கொரோனா பேரிடர் காரணமாக நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதிரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார். இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்

Continue reading …

கட்டுமான தொழிலாளர்களே உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா? செக் செய்து கொள்ளுங்கள் !!

Comments Off on கட்டுமான தொழிலாளர்களே உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா? செக் செய்து கொள்ளுங்கள் !!

தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் கொவிட்-19 வீரர்களாக தொடர்ந்து ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது நிகழ்ச்சியில் பங்கேற்ற இத்துறைக்கான இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ்குமார் கங்குவார், கொவிட் பெருந்தொற்றின் போது ஆற்றிய சிறப்பான பணிக்காக  தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்களைப் பாராட்டினார். தொழில்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்ததாக குறிப்பிட்ட அமைச்சர்,  இரண்டு கோடி கட்டுமான தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூபாய் 5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்றார். இதனைத் தொய்வின்றி செயல்படுத்துவதற்காக 80 அலுவலர்களை மத்திய தொழிலாளர் ஆணையம் நியமித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைவதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் அலுவலர்கள் இரவு பகல் பாராமல் பாடுபடுவதாக திரு கங்குவார் கூறினார்.இருபது கட்டுப்பாட்டு அறைகளில் சுமார் 16,000 புகார்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 96 சதவீத புகார்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தீர்த்து வைத்ததாகவும் அமைச்சர் கூறினார். எனவே ஏற்கனவே உரிய ஆவணங்கள் செலுத்தி வங்கி கணக்கில் பணம் வராத கட்டுமான தொழிலாளர்கள் உடனடியாக வங்கி அலுவலகத்தை அணுகவும். இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்

Continue reading …

EVM யில் முறைகேடு செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் சவால்

Comments Off on EVM யில் முறைகேடு செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் சவால்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜயின், வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது, அதில் முறைகேடு செய்யவே முடியாது என்பதை தேர்தல் ஆணையம் பல முறை தெளிவுபடுத்திவிட்டது என்று கூறினார் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முடிந்தால் முறைகேடு செய்து காட்டுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சவால் விட்டும் இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அவர் […]

Continue reading …

இஸ்ரோ சாதித்துவிட்டீர்கள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் !!

Comments Off on இஸ்ரோ சாதித்துவிட்டீர்கள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் !!

இஸ்ரோ சாதித்துவிட்டீர்கள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் !! பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறையை நான் வாழ்த்துகிறேன். கொவிட்-19 காலகட்டத்தில், குறித்த காலத்துக்குள் இதை செய்து முடிப்பதற்காக பல்வேறு சவால்களை நமது விஞ்ஞானிகள் எதிர்கொண்டார்கள். அமெரிக்கா மற்றும் லக்சம்பர்கில்  இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒன்று […]

Continue reading …

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு புதிய விதியை வெளியிட்டது மத்திய அரசு

Comments Off on ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு புதிய விதியை வெளியிட்டது மத்திய அரசு

2021-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பயணத்தில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் திரு நக்வி வெளியிட்ட அறிவிப்பில், 2021-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின்போது, கொரோனா பெருந்தொற்றுக்கான தேச-சர்வதேச வழிகாட்டும் நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார். 2021-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு ஆன்லைன் வழியாகவும், தபால் […]

Continue reading …

எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்…விராட் விளக்கம்

Comments Off on எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்…விராட் விளக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோற்கடித்தது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது. ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கோப்பை வெல்லும் கனவு இந்த முறையும் கனவாகவே போய்விட்டது. தோல்விக்குப் பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி […]

Continue reading …