காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்கள் பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.



