ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு பிரபல நடிகை மிருணாளினியை கரம் பிடிக்க இருக்கிறார். நடிகை மிருணாளினி, தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளினி ரவி.
அதைத்தொடர்ந்து, ‘சாம்பியன்’ படத்தில் நாயகி ஆனார். விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான ‘எனிமி’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஜாங்கோ’, விக்ரம் நடித்த ‘கோப்ரா’, ‘ரோமியோ’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார் மிருணாளினி. தெலுங்கில், கட்டலகொண்டா கணேஷ், மாமா மச்சிந்த்ரா, ஆர்கானிக் மாமா ஹைபிரிட் அல்லுடு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மிருணாளினி ரவி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ரோமியோ’. விஜய் ஆண்டனி நடித்த இந்தப் படம் கடந்த 2024ல் வெளியானது. அதன் பிறகு மிருணாளினி நடிப்பில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.



