Home » Archives by category » இந்தியா (Page 166)

இரட்டை அடுக்கு கதர் முகக்கவசங்களை உருவாக்கியுள்ள காதி !

Comments Off on இரட்டை அடுக்கு கதர் முகக்கவசங்களை உருவாக்கியுள்ள காதி !
இரட்டை அடுக்கு கதர் முகக்கவசங்களை உருவாக்கியுள்ள காதி !

இரட்டை அடுக்கு கதர் முகக்கவசம் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ள காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையம், அதை அதிக அளவில் விநியோகிப்பதற்கான தருவிப்பு ஆணைகளைப் பெற்றுள்ளது. அதன் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் அரசுக்கு மட்டுமே 7.5 லட்சம் கவசங்களை வழங்க ஒரு ஆர்டரை அது பெற்றுள்ளது. இதில், 5 லட்சம் முகக்கவசங்கள் ஜம்மு மாவட்டத்துக்கும், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் புல்வாமா மாவட்டத்துக்கும், ஒரு லட்சம் உதம்பூர் மாவட்டதுக்கும் மற்றும் 10,000 குப்வாரா மாவட்டத்துக்கும் […]

Continue reading …

முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

Comments Off on முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !
முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

புதுடெல்லி: கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம்  ஆலோசனை நடத்தினார். கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஏற்கனவே ஊரடங்கை ஏப்ரல் 14 க்குப் பிறகு தொடர முடிவு […]

Continue reading …

40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து – மருத்துவர் இராமதாஸ்

Comments Off on 40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து – மருத்துவர் இராமதாஸ்
40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து – மருத்துவர் இராமதாஸ்

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவின் மீது கிருமித் தொற்று தாக்குதலை மட்டுமின்றி, அரசாலும், தனிமனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத, வரலாறு காணாத பொருளாதாரத் தாக்குதலையும் நடந்த்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலின் பக்கவிளைவுகளால் இந்தியாவில் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளால் அமைப்பு சார்ந்த பணியாளர்களை விட, அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த […]

Continue reading …

அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு சந்தா செலுத்த அவகாசம் நீட்டிப்பு !

Comments Off on அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு சந்தா செலுத்த அவகாசம் நீட்டிப்பு !
அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு சந்தா செலுத்த அவகாசம் நீட்டிப்பு !

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு/ ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்கள் சந்தா தொகை செலுத்த தபால் நிலையங்களுக்கு செல்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் சில தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகிற போதிலும், அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இந்த வாடிக்கையாளர்கள் அனைவரின் வசதி கருதி, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தபால் துறையின், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு இயக்குனரகம், […]

Continue reading …

பிரதமர் மோடி புனித வெள்ளி செய்தி !

Comments Off on பிரதமர் மோடி புனித வெள்ளி செய்தி !
பிரதமர் மோடி புனித வெள்ளி செய்தி !

உண்மை, சேவை மற்றும் நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஏசு கிறிஸ்துவின் தியாகத்தை புனித வெள்ளி நாளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். பிறருக்கு சேவை செய்வதில் ஏசு கிறிஸ்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருடைய தைரியமும், அறநெறியும் தனித்துவமானவை. நீதிக்கான அவருடைய நிலைப்பாடும் தனித்தன்மையுடன் தான் இருந்தது. இந்தப் புனித வெள்ளி நாளில் ஏசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதியில் அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் என்று பாரத பிரதமர் […]

Continue reading …

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இந்தியக் கடற்படை !

Comments Off on குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இந்தியக் கடற்படை !
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இந்தியக் கடற்படை !

மும்பை : கோவிட்-19 முடக்கநிலை அமல் காலத்தில் மும்பையில் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக, அடிப்படை உணவுப் பொருட்களைக் கொண்ட ரேஷன் பைகளை இந்திய கடற்படை நிர்வாகம் மாநில அரசிடம் ஒப்படைத்தது. மும்பையில் தவித்து வரும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ஏப்ரல் 4 மற்றும் 8 ஆம் தேதிகளில் இவை வழங்கப்பட்டன. முடக்கநிலை காலத்தில் தவித்து வரும் குடிபெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உதவி செய்ய வேண்டும் என்று மும்பை மாநகர […]

Continue reading …

உகாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

Comments Off on உகாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
உகாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி உகாண்டா அதிபர் யோவேரி காகுட்டா முசேவேனியுடன் இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்த் தொற்றை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சுகாதாரத் துறை சவால்கள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். இப்போதைய சுகாதார நெருக்கடி நேரத்தில் தனது ஆப்பிரிக்க நண்பர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்று உகாண்டா அதிபர் முசேவேனியிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். உகாண்டாவில் இந்த நோய் பரவாமல் தடுப்பதில், அந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு […]

Continue reading …

மோடிக்கு நன்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Comments Off on மோடிக்கு நன்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப்
மோடிக்கு நன்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலகையே அசுருத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தோற்றுக்கு அமெரிக்காவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட நாங்கள் ஆர்டர் செய்த சில மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் […]

Continue reading …

வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு !

Comments Off on வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு !
வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டியும், ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகை திருப்பிக் கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோர் இதன் மூலம் பயனடைவார்கள். அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க திருப்பி கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு நடுத்தரத்தொழில் […]

Continue reading …

கொவிட்-19 பொய் செய்திகள் : உஷார் !

Comments Off on கொவிட்-19 பொய் செய்திகள் : உஷார் !
கொவிட்-19 பொய் செய்திகள் : உஷார் !

புதுடெல்லி : கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான பல்வேறு பொய் செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இதைக் கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவு கொவிட்-19 தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, உண்மையை எடுத்துரைக்கிறது. இன்று அவர்கள் அளித்துள்ள எச்சரிக்கை தகவல்கள். 1. வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு OTP ஐ சொல்லுங்கள் என்று கேட்கும் சைபர் […]

Continue reading …