
பிரியங்கா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசியல் செய்து கொண்டிருந்தார். தற்போது தேசிய அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதுமட்டுமின்றி அவர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் தேசியளவில் பிரபலமாக இருக்கும் ஒரு முகத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் பிரியங்கா காந்தியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருந்த […]
Continue reading …
விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக டில்லியை நோக்கி செல்லும் பேரணி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை தடுக்க ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]
Continue reading …
மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இச்செயலை கண்டித்து வரும் 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் இராமேஸ்வரத்தில், கழக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக அறிவிப்பில், “கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர் 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. […]
Continue reading …
பிரதமர் மோடிக்கு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் […]
Continue reading …
பேஸ்புக் லைவ் விவாவத்தில் பங்கு கொண்ட சிவசேனா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மகனும், முன்னாள் கவுன்சிலருமான அபிஷேக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வினோத் கோசல்கர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது மகன் அபிஷேக் அப்பகுதியில் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். அபிஷேக் கவுன்சிலராக இருந்தபோதிலிருந்து சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. […]
Continue reading …
ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தற்போதைய முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டிக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க கடும் போட்டி நிலவுகிறது. விரைவில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், கூட்டணி பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த பல்வேறு […]
Continue reading …
டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி வழங்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் மற்றும் பெருவெள்ள பாதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்தன. இதனை தேசிய பேரிடராக அறிவித்து சுமார் 37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை […]
Continue reading …
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று திடீரென 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவில் இருந்தது. தற்போது 590 புள்ளிகள் சரிந்து 71,561 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 21,749 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்று 500 புள்ளிகளுக்கு மேல் […]
Continue reading …
மத்திய அரசு இந்தியா டூ மியான்மர் எல்லை முழுவதையும் வேலி அமைத்து தடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புக்கு மணிப்பூர் இனக்குழுக்கள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மணிப்பூரின் மெய்தி இனக்குழுவினருக்கும், குகி இனக்குழுக்களுக்கும் இடையே கடந்தாண்டு முதலாக தொடர் மோதல் வன்முறைகள் நடந்து வருகிறது. மணிப்பூர் டூ மியான்மர் இடையேயான எல்லையை வேலி அமைத்து மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டில் அண்டை நாடான மியான்மரில் ஆங் சான் சூகியின் மக்களாட்சியை […]
Continue reading …
டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் வரிப் பகிர்வுக் கொள்கைகளை எதிர்த்து கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. கடந்த ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சமமான நிதி பகிர்வு இல்லை என்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கிய அறிவிப்புகள் எதுவுமே இடம்பெறவில்லை எனவும் கர்நாடகா குற்றம் சாட்டியிருந்தது. இதை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. டில்லி ஜந்தர் மந்தரியில் நடைபெற்ற […]
Continue reading …