காதல் ஜோடி சென்னை அடுத்துள்ள பரங்கிமலை ரயில் நிலையமருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு 8:15 மணிக்கு கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். காதலன் படுகாயத்துடன் இருந்த நிலையில், ரயில்வே போலீசார் அவரை மீட்டு […]
Continue reading …பிபிசி ஆவண திரைப்படம் ஒன்றை சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் பிரிவு ஒன்று திரையிட முயற்சி செய்தது. ஆனால் அத்திரைப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. நேற்று சென்னை மாநில கல்லூரியில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டது. குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை தொடர்ந்து எதிர்ப்பு ஆதரவும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்திலும் பிவிசி ஆவணப்படம் திரையிட மாணவர்களின் ஒரு பிரிவு முடிவு செய்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் […]
Continue reading …சென்னை கல்லூரி மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் கல்லூரி முதல்வருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது. கல்லூரி முதல்வர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கல்லூரி கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நந்தனம் ஒ.எம்.சி.ஏ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் இதனால் நந்தனம் கல்லூரியின் […]
Continue reading …சென்னை அரும்பாக்கத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவரான டாக்டர் ஷர்மிகா பல்வேறு மருத்துவ தகவல்களை யூட்யூப் சேனல்கள் மூலம் வழங்கி வருகிறார். சமீபத்தில், அவர் பேசிய மருத்துவ தகவல்கள் அறிவியல்பூர்வமற்றதாகவும், அடிப்படை ஆதாரங்கள் அற்றதாகவும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவரது மருத்துவ ஆலோசனைகள் சர்ச்சைக்குள்ளான நிலையில் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பதிவிட்ட நெட்டிசன்களும், அலோபதி டாக்டர்கள் சிலரும் டாக்டர் ஷர்மிகாவுக்கு விமர்சனம் தெரிவித்தனர். தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்குவதாக […]
Continue reading …அரக்கோணத்தில் நடைபெற்ற திருவிழாவில் கிரேன் ஒன்று சரிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரக்கோண நெமிலியில் உள்ள கீழவீதி கிராமத்தின் மண்டியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இத்திருவிழாவில் மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றபோது துரதிர்ஷடவசமாக கிரேன் சரிந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோலாகலமாக […]
Continue reading …தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் சிறப்பு ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜனவரி 14-ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு கிளம்பும் என்றும் நெல்லைக்கு மறுநாள் காலை 9 மணிக்கு சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து […]
Continue reading …பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருப்போர் தனது சொந்த ஊருக்கு படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பரும் அவதிக்குள்ளாகினர். பொங்கல் பண்டிகையின் விடுமுறைக்காக அவரவர் தனது சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருப்பதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி மக்கள் கொண்டாட இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளை ஏராளமான பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். இன்று மக்கள் தங்கள் […]
Continue reading …நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 84 வயதான துரைமுருகன் காய்ச்சல் என்றும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் […]
Continue reading …சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை திருப்பூர் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் அடிப்படையில் 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது எந்தவித நோட்டீஸும் கொடுக்காமல் […]
Continue reading …நாளை சென்னையில் நடக்கவிருக்கும் மாரத்தான் போட்டிக்காக ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய கைலாசத்திலிருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. காந்தி மண்டபத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதி இல்லை. மத்திய கைலாஷ், காந்தி மண்டபத்திலிருந்து வருவோர் எல்பி சாலை மற்றும் சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம். மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும் என்று […]
Continue reading …