Home » Archives by category » சென்னை (Page 79)

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !

Comments Off on அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனையை ஏழை, எளிய மக்களும் செய்துகொள்ளும் வகையில், முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் […]

Continue reading …

நீ நடிச்ச படம் பேரு கத்தி, ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி:டி.ராஜேந்தரின் புலி பஞ்ச் !

Comments Off on நீ நடிச்ச படம் பேரு கத்தி, ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி:டி.ராஜேந்தரின் புலி பஞ்ச் !

மகாபலிபுரம்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய டி.ராஜேந்தர்,” நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.புலி திரைப்படத்தின் யாசை வெளியீட்டு விழா மகாபலிபுரத்தில் நடந்தது.இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், அட்டக்கத்தி நந்திதா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள்  எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், […]

Continue reading …

இந்திய கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபடுவதே உண்மையான வளர்ச்சி: ராமதாஸ் !

Comments Off on இந்திய கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபடுவதே உண்மையான வளர்ச்சி: ராமதாஸ் !

இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 3 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு வளர்ச்சியடைவதைவிட, கிராம மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டனர் என்பதே மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியா தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட இரு புள்ளிவிவரங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத இருவேறு இந்தியாக்கள் இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன. முதலாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (Gross Domestic Product -GDP) 2 லட்சம் கோடி […]

Continue reading …

ஹெல்மெட் இன்று முதல் அவசியம்: மீறினால் ஆவணங்கள் பறிமுதல்!

Comments Off on ஹெல்மெட் இன்று முதல் அவசியம்: மீறினால் ஆவணங்கள் பறிமுதல்!

சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிச் செல்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதை மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கைப்பட்டு உள்ளது.இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது.அதன்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுடன், உடன் பயணிப்பவர்களும் கட்டாயமாக […]

Continue reading …

நேபாளத்தில் நிலநடுக்கம்: சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் நில அதிர்வு !

Comments Off on நேபாளத்தில் நிலநடுக்கம்: சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் நில அதிர்வு !

நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சென்னையில் வலசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் லேசாக குலுங்கியது. தலைநகர் டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும், அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதால் டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். டெல்லியில் நில அதிர்வின் தாக்கம் குறித்து அறிக்கை […]

Continue reading …

பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை: மேயர் சைதை துரைசாமி விளக்கம் !

Comments Off on பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை: மேயர் சைதை துரைசாமி விளக்கம் !

சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் குறைவாக உள்ளது என்றும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். இது குறித்து நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் தெரிவித்ததாவது: பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் இறப்பு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நோயாளிகள் வேறு நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் இறப்புக்கான பிரதான காரணம் ஆய்வு செய்யப்பட்ட பிறகே உறுதி செய்யப்படும். இந்தியாவில் […]

Continue reading …