Home » Archives by category » சென்னை (Page 41)

பேருந்துகளில் 5 வயது குழந்தைகளுக்கு கட்டணமில்லை!

Comments Off on பேருந்துகளில் 5 வயது குழந்தைகளுக்கு கட்டணமில்லை!

அரசு பேருந்துகளில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தமிழக சட்டப்பேரவையில் இன்று பதிலுரை ஆற்றி வருகிறார். அவர் பேசியதாவது:- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். அதோடு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு […]

Continue reading …

“சென்னை பஸ்” ஆப் அறிமுகம்!

Comments Off on “சென்னை பஸ்” ஆப் அறிமுகம்!

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சென்னை பேருந்துகள் குறித்த முழு விபரங்களையும் தெரிந்து கொள்வதற்காகவே “சென்னை பஸ்” என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “இந்த ஆப்பை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வரும் பேருந்துகள் எப்போது வரும்? எப்போது செல்லும்? தற்போது எங்கு உள்ளது? எத்தனை நிமிடம் கழித்து வரும் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம். […]

Continue reading …

அமைச்சர் மா சுப்பிரமணியன் நடிகர் விவேக்கிற்கு மரியாதை!

Comments Off on அமைச்சர் மா சுப்பிரமணியன் நடிகர் விவேக்கிற்கு மரியாதை!

அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னையில் நடப்படும் மரத்திற்கு ‘விவேக் மரம்’ என்ற பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு லட்சம் மரம் வைக்கப்படும் என்றும், ஒரு லட்சமாவது மரம் வைக்கப்படும்போது அந்த மரத்திற்கு விவேக் மரம் என்று பெயர் வைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இதுவரை 98,000 மரம் நடப்பட்டு உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு லட்சம் மரம் நடப்படும் என்றும் ஒரு லட்சமாவது மரம் […]

Continue reading …

டெலிவரி சேவையில் ‘டிரோன்’: சென்னை நிறுவனத்துடன் கைகோர்த்த ‘ஸ்விக்கி’

Comments Off on டெலிவரி சேவையில் ‘டிரோன்’: சென்னை நிறுவனத்துடன் கைகோர்த்த ‘ஸ்விக்கி’

சென்னை, மே 3: மளிகைப் பொருள் டெலிவரி சேவைகளுக்கு, டிரோன்களை ஸ்விக்கி நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இதற்காக, சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நம் நாட்டில், ஆன்லைனின் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் மற்றும் மளிகைப் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையை, ஸ்விக்கி நிறுவனம் வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில், இந்த நிறுவனத்தின் டெலிவரி சேவைகளை, அதிக அளவிலான மக்கள் பயன்படுத்த துவங்கினர். இந்த சேவையின்கீழ், […]

Continue reading …

கஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல… தீவிரம் காட்ட வேண்டும் – இராமதாசு !

Comments Off on கஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல… தீவிரம் காட்ட வேண்டும் – இராமதாசு !

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல. கல்விக்கும், தொன்மைக்கும் புகழ் பெற்ற தமிழ்நாடு இப்போது கஞ்சா, அபின் உள்ளிட்ட […]

Continue reading …

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் எம்.எல்.ஏ., !

Comments Off on தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் எம்.எல்.ஏ., !

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என அதன் தலைவர் வேல்முருகன் அறிக்கை.  உலக வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, […]

Continue reading …

ரம்ஜான் பண்டிகை தினப்பரிசு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ.

Comments Off on ரம்ஜான் பண்டிகை தினப்பரிசு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ.

வருகிற 3ம் தேதி அன்று முஸ்லிம் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாட காத்திருக்கின்றனர். இதன் காரணமாக ரம்ஜான் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின். “என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் தொகுதி மக்களுக்கு ரம்ஜான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கினேன்” என்று கூறியுள்ளார் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி. இது குறித்து அவர் கூறும்போது, “என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் சேப்பாக்கம் […]

Continue reading …

செயலி மூலம் சூதாட்ட விளையாட்டு, சென்னை ஐடி ஊழியர் தற்கொலை!

Comments Off on செயலி மூலம் சூதாட்ட விளையாட்டு, சென்னை ஐடி ஊழியர் தற்கொலை!

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் ஐடி ஊழியராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திடீரென அவருக்கு வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார். அதன்பிறகு மதுவிக்கு அடிமையான இவர், கிரெடிட் கார்டு மூலம் அளவுக்கு மீறி கடனை வாங்கி ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடியதாக தெரிகிறது. அதில் சுமார் 35 லட்சத்தை அவர் இழந்துள்ளாராம். இதனை அடுத்து கடனை செலுத்த கோரி வங்கியில் இருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு தூக்கில் […]

Continue reading …

சென்னை ஐஐடியில் கொரோனா எண்ணிக்கை மேலும் உயர்வு!

Comments Off on சென்னை ஐஐடியில் கொரோனா எண்ணிக்கை மேலும் உயர்வு!

இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஐஐடி வளாகத்தில் உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் சமீப காலமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி வளாகத்தில் புதிதாக இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் ஐஐடியில் கொரோனா […]

Continue reading …

தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்!

Comments Off on தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்!

தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் […]

Continue reading …