விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். நேற்று (திங்கள்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பாமக உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மாற்றம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், “எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு […]
Continue reading …சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவால் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாதிப்பில்லை: “சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவால் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எவ்வித […]
Continue reading …அரசு கேபிள் டிவி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதை செயல்படுத்தும் வகையில், கேபிள் டிவி நிறுவனம் […]
Continue reading …தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு ரூ.60,610 கோடி ஒதுக்கீடு * தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார். தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: இடைக்கால பட்ஜெட்டுகாக ரூ.60,610 கோடி நிதி ஒதுக்கீடு. * காவல்துறைக்கு ரூ.6099 கோடி […]
Continue reading …தமிழகத்தில் மேலும் 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறும்போது, “இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலை கொண்டுள்ளன. இவை மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் கனமழை […]
Continue reading …தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம் மூலம் தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிவாரணப் பணிகள் மற்றும் அந்த பகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள மழைக்கால மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தினமும் நேரில் சென்று பார்வை யிட்டு வருகிறார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா […]
Continue reading …தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று ‘வீர விளையாட்டு’ புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்தார். சென்னையில் புகைப்படக் கலைஞர் சுரேஷ் எடுத்த ஜல்லிக்கட்டு புகைப்படங்களை ‘வீர விளையாட்டு’ என்ற பெயரில் கண்காட்சியாக வைத்திருக்கிறார். இக்கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். நவம்பர் 8ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற இருக்கிறது. ‘வீர விளையாட்டு’ கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசிய கமல்ஹாசன், “‘ஜல்லிக்கட்டு’ தொந்தரவு பண்ற விழா என்று பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். […]
Continue reading …உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது எதிர்பார்த்ததை விட இருமடங்காகும். தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி இலக்கு நிர்ணையித்திருந்தது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை மாலை முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முக்கிய அம்சங்கள்: * “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு […]
Continue reading …உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனையை ஏழை, எளிய மக்களும் செய்துகொள்ளும் வகையில், முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் […]
Continue reading …மகாபலிபுரம்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய டி.ராஜேந்தர்,” நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.புலி திரைப்படத்தின் யாசை வெளியீட்டு விழா மகாபலிபுரத்தில் நடந்தது.இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், அட்டக்கத்தி நந்திதா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், […]
Continue reading …