இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 3 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு வளர்ச்சியடைவதைவிட, கிராம மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டனர் என்பதே மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியா தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட இரு புள்ளிவிவரங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத இருவேறு இந்தியாக்கள் இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன. முதலாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (Gross Domestic Product -GDP) 2 லட்சம் கோடி […]
Continue reading …சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிச் செல்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதை மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கைப்பட்டு உள்ளது.இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது.அதன்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுடன், உடன் பயணிப்பவர்களும் கட்டாயமாக […]
Continue reading …நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சென்னையில் வலசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் லேசாக குலுங்கியது. தலைநகர் டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும், அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதால் டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். டெல்லியில் நில அதிர்வின் தாக்கம் குறித்து அறிக்கை […]
Continue reading …சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் குறைவாக உள்ளது என்றும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். இது குறித்து நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் தெரிவித்ததாவது: பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் இறப்பு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நோயாளிகள் வேறு நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் இறப்புக்கான பிரதான காரணம் ஆய்வு செய்யப்பட்ட பிறகே உறுதி செய்யப்படும். இந்தியாவில் […]
Continue reading …