Home » Archives by category » தமிழகம் (Page 102)

நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் போஸ் வெங்கட்!

Comments Off on நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் போஸ் வெங்கட்!

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் வருகையை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை வெளியிட்டு உறுதிபடுத்தினார். அதற்கான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின் தனது 69வது படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து சக நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் […]

Continue reading …

வைரமுத்து எச்சரிக்கை..!

Comments Off on வைரமுத்து எச்சரிக்கை..!

கவியரசு வைரமுத்து உலகம் சந்திக்க போகும் மிகப்பெரிய எதிர் விளைவு குறித்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மனிதர்களுக்கான வேலைவாய்ப்பை செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி காரணமாக குறைந்து கொண்டே வருகிறது. முதல் கட்டமாக சேவை துறையில் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோன நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் ரோபோக்கள் ஆதிக்கம் உற்பத்தி துறையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வரும் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு என்பதே மிக குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கவிதை […]

Continue reading …

பாஜகவிலிருந்து பிரிய காரணம் கூறிய எடப்பாடியார்!

Comments Off on பாஜகவிலிருந்து பிரிய காரணம் கூறிய எடப்பாடியார்!

அதிமுக கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிவதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநில, தேசிய கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிக்காக தயாராகி வருகின்றன. ஆனால் இந்த பேச்சுக்கள் தொடங்கும் முன்னதாகவே முந்தைய நாடாளுமன்ற தேர்தல் முதலாக கூட்டணியிலிருந்து வந்த பாஜக மற்றும் அதிமுகவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜகவின் தலைமையே எனவும் பேசிக் கொள்ளப்பட்டது. தற்போது பாஜக […]

Continue reading …

ஒ.பி.எஸ்க்கு எதிராக சிவகங்கையில்  கண்டன போஸ்டர்.

Comments Off on ஒ.பி.எஸ்க்கு எதிராக சிவகங்கையில்  கண்டன போஸ்டர்.

ஒ.பி.எஸ்க்கு எதிராக சிவகங்கையில்  கண்டன போஸ்டர். இன்று ஒ.பி.எஸ் தலைமையில் நெல்லையில் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களைச் சந்திக்க  ஓபிஎஸ் வரும் வேளையில் அவர் வருகையைக் கண்டித்து சிவகங்கை நகர அதிமுக நிர்வாகியான ராஜா என்பவர் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் ஓ. பன்னீர்செல்வத்தைக் கண்டித்து போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த போஸ்டர்களில், ‘கழகத்தைக் கயவர்களுக்குக் காட்டிக் கொடுத்த பன்னீர் […]

Continue reading …

புதுக்கோட்டையில் தொடரும் சாதி வெறி. உணவோடு சாலை மறியல்.

Comments Off on புதுக்கோட்டையில் தொடரும் சாதி வெறி. உணவோடு சாலை மறியல்.

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகாமையில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புதுநகரைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக் கிடா வெட்டி பூஜை நடத்தி உள்ளனர். அப்போது கிடா வெட்டு பூஜையில் கலந்து கொள்ளக் கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் பூஜை நடத்திய சமூகத்தினர் அழைத்துள்ளனர். இந்நிலையில் மட்டங்கால் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு […]

Continue reading …

மீன்,இறைச்சி மார்க்கெட்டை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்.

Comments Off on மீன்,இறைச்சி மார்க்கெட்டை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.13.49 கோடியில் மீன்,இறைச்சி மார்க்கெட்டை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் […]

Continue reading …

கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலுக்கு, இரண்டு பேர் உயிரிழப்பு.

Comments Off on கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலுக்கு, இரண்டு பேர் உயிரிழப்பு.

கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலுக்கு, இரண்டு பேர் உயிரிழப்பு. கர்நாடகாவின், உத்தர கன்னடா, ஷிவமொகா, சிக்கமகளூரு மாவட்டங்களில், ‘கியாசனுார் வன நோய்’ என்றழைக்கப்படும், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் கர்நாடக பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த கியாசனுார் வனப்பகுதியில், 1957ல் இந்த காய்ச்சல் முதல்முறையாக கண்டறியப்பட்டது. மனித உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலான இந்த வைரஸ் காய்ச்சல், தெற்காசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களிலும் குரங்கு […]

Continue reading …

சிறந்த விளையாட்டு மாநிலமாக தமிழகம் தேர்வு. திருச்சி கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

Comments Off on சிறந்த விளையாட்டு மாநிலமாக தமிழகம் தேர்வு. திருச்சி கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

சிறந்த விளையாட்டு மாநிலமாக தமிழகம் தேர்வு. திருச்சி கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. தமிழகத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 18 கோடி நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருச்சி தேசியக்கல்லூரியில் சர்வதேச விளையாட்டு (ஐசிஆர்எஸ்) கருத்தரங்கு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 11-ந் தேதி […]

Continue reading …

அதிமுகவுக்கு பெருகும் முக்குலத்தோர் ஆதரவு.

Comments Off on அதிமுகவுக்கு பெருகும் முக்குலத்தோர் ஆதரவு.

அதிமுகவுக்கு பெருகும் முக்குலத்தோர் ஆதரவு. அதிமுக கூட்டணி யார்… யார்..? இருக்கிறார்கள் என்று இன்னும் முடிவாகாத நிலையில், சின்ன, சின்ன கட்சிகள் மட்டுமே தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை, அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு, மருது தேசிய கழகம் ஆகிய முக்குலத்தோர் அமைப்பினை சேர்ந்த தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களோடு வந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தனி தனியாக  சந்தித்து அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் சுபாஷ் […]

Continue reading …

உதகையில் மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு! முதலமைச்சர் இரங்கல்!

Comments Off on உதகையில் மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு! முதலமைச்சர் இரங்கல்!

இன்று உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இன்று உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. புதிய வீட்டுக்கான கழிவறை அமைக்கும் பணியில் 6 பெண்கள் உட்பட 10 கட்டுமான பணியாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் கழிவுறைக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே மண் சரிவு ஏற்பட்டு பணியாளர்கள் மீது விழுந்தது. இதில் 10 பேரும் மண்ணில் […]

Continue reading …