Home » Archives by category » தமிழகம் (Page 214)

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 600 சிறப்பு பேருந்துகள்!

Comments Off on கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 600 சிறப்பு பேருந்துகள்!

சென்னையிலிருந்து கிறிஸ்மஸ் பண்டிக்கையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாவருடம் தீபாவளி, பொங்கல் உட்பட பண்டிகையொட்டி சென்னை மாநகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டும். அதன்படி, இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து பொதுமக்களின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 300 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]

Continue reading …

டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞர்!

Comments Off on டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞர்!

மதுபானங்களை பறித்துச் செல்ல திருச்சி டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார் ஒரு இளைஞர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞர் வந்து ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, மதுபானங்களுக்கு காசுகொடுக்காமல் நாளை கொடுப்பதாக அவர் அதை எடுத்துச் சென்றார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Continue reading …

சத்யராஜ் மகள் அதிர்ச்சி தகவல்!

Comments Off on சத்யராஜ் மகள் அதிர்ச்சி தகவல்!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா நோயாளிகள் பேராபத்தை சுற்றி வருகின்றனர் என்ற கருத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என்னுடைய நோயாளி ஒருவர் மருந்து வாங்குவதற்காக மருந்து கடைக்கு சென்றார். அவர் வாங்கிய 4 மருந்துகளில் மூன்று மாத காலாவதியான மருந்து. காலவதியான மருந்துகளை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் மருந்துகள் வாங்கும்போது மருந்துகள் காலாவதி தேதியை சோதனை செய்து வாங்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்து, மளிகை பொருட்கள் […]

Continue reading …

சசிகலா புஷ்பாவின் கார் மீது தாக்குதல்!

Comments Off on சசிகலா புஷ்பாவின் கார் மீது தாக்குதல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலா புஷ்பாவின் கார் மீது தாக்குதல் நடந்துள்ளதை குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக தமிழக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் […]

Continue reading …

மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

Comments Off on மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

மு.ராஜேந்திரனுக்கு 2022ம் ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்கிய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு, காலாபாணி என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், எழுதிய காலாபாணி என்ற நாவல் காளையர் கோயில் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலாகும். எனவே, எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய […]

Continue reading …

தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை!

Comments Off on தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை!

இவ்வாண்டு பிப்ரவரி 4-ம் தேதி விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக “லத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். பட புரமோஷனில் கலந்துகொண்டு வரும் விஷால் […]

Continue reading …

ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை முயற்சி!

Comments Off on ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை முயற்சி!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.1 கோடி இழந்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளையத்தில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் விஜய்(33) பிகாம் படித்துள்ளார். தன் தந்தையுடன் இணைந்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆன்லைன் ரம்மி […]

Continue reading …

ஆவின் நிர்வாகத்தின் விலை உயர்வு அறிவிப்பு!

Comments Off on ஆவின் நிர்வாகத்தின் விலை உயர்வு அறிவிப்பு!

ஆவின் நிர்வாகம் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஆவின் நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஒரு லிட்டர் பிரிமியம் நெய் 630 ரூபாயிலிருந்து ரூ.680 என அதிகரித்தது. கடந்த ஒன்பது மாதங்களில் மூன்று முறை ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 500 கிராம் ஆவின் வெண்ணெய் 250 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது […]

Continue reading …

அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு!

Comments Off on அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு!

அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டன என்பதும் ஏராளமான மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அரையாண்டுதேர்வு டிசம்பர் 23ம் தேதி முடிவடையும் நிலையில் 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையில் கிறிஸ்மஸ் புத்தாண்டு விடுமுறையும் அடங்கும். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் […]

Continue reading …

போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

Comments Off on போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

போக்குவரத்துத்துறை மூத்த குடிமகன்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்குவது குறித்து அறிவித்துள்ளது. டிசம்பர் 21ம் தேதி முதல் சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்களை பெறலாம் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அமைந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், சென்னையில், 4 பணிமனை பேருந்து நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 […]

Continue reading …