Home » Archives by category » தமிழகம் (Page 220)

திருவண்ணாமலையில் டிசம்பர் 6 உள்ளூர் விடுமுறை!

Comments Off on திருவண்ணாமலையில் டிசம்பர் 6 உள்ளூர் விடுமுறை!

மாவட்ட நிர்வாகம் திருவண்ணாமலையில் டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் டிசம்பர் 6ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து தீபத்திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட […]

Continue reading …

கனிமொழிக்கு தமிழிசை பதிலடி!

Comments Off on கனிமொழிக்கு தமிழிசை பதிலடி!

புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னர் தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார் என்றும், வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்று கனிமொழியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். “கவர்னர் பதவியே ஒரு காலாவதியான பதவி, ஒரு மாநிலத்திற்கு கவர்னர் இல்லாமல் இருந்தால் சட்டங்கள் உடனடியாக இயக்கப்படும்” என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழியின் இப்பேச்சுக்கு, “தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் […]

Continue reading …

முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!

Comments Off on முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என ஆவேசமாக கூறியுள்ளார். முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “புதுச்சேரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 350 மதுபான கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. ஆறு மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது. மதுபான ஆலைகளுக்கு அரசு மேலும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து இன்னும் சில நாட்களில் புதுச்சேரியில் சாராயக் கடல் ஓடும். கோவில்கள், […]

Continue reading …

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உண்டியல் வசூல்!

Comments Off on மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உண்டியல் வசூல்!

தேவஸ்தான அதிகாரிகள் கோடிக்கணக்கில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூலாகி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் 1 கோடியே 4 இலட்சத்து 37ஆயிரத்து 557 ரூபாய் ரொக்க பணம் ரொக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 544 கிராம் தங்கம் 6 கிலோ 576 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 465 காணப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாத […]

Continue reading …

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதி!

Comments Off on உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போர் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னகப்பட்டு குளத்தில், மூழ்கிய முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல்கள் கூறியதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது […]

Continue reading …

கொடநாடு கொலை விசாரிக்க தனிப்படை அமைப்பு!

Comments Off on கொடநாடு கொலை விசாரிக்க தனிப்படை அமைப்பு!

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடு போனதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க […]

Continue reading …

சிறைத்துறை டிஜிபி புதிய தகவல்!

Comments Off on சிறைத்துறை டிஜிபி புதிய தகவல்!

சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தமிழ்நாட்டு சிறையிலுள்ள கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திப்பதில் நவீன முறை பயன்படுத்தப்படும் என என்பவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மத்திய சிறையில் கைதிகளை குடும்பத்தினர் சந்திக்கும் போது பொருட்களை கொடுப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய சிறைகளில் கைதிகள் குடும்பத்தினரை சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடித் தடுப்பு அமைக்கப்படும். கைதிகள் மற்றும் உறவினர்கள் போன்கள் மூலம் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் கைதிகளுக்கு […]

Continue reading …

வாடகைதாரர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் மின்வாரியம்!

Comments Off on வாடகைதாரர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் மின்வாரியம்!

மின்வாரியம் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பும் வாடகைதாரரின் பெயருக்கு மாறிவிடுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை மின் இணைப்பில் இணைத்தால் அவரது பெயருக்கு மின்இணைப்பு மாறாது. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய முடியும். வீட்டின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே வாடகைவீட்டில் உள்ளவர்கள் மின் இணைப்பில் தங்களது ஆதார் பதிவு செய்து கொள்ள முடியும். வாடகைதாரர் மாறும் போது புதிதாக குடியிருக்க வருவோரின் […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

அமைச்சர் செந்தில்பாலாஜி 100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவதை குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “கைத்தறி, விசைத்தறி, 100 யூனிட் இலவச மின்சாரம் என அனைத்திலும் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் பின்பற்றப்படும். அவை நிறுத்தப்பட மாட்டாது. சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றங்களை மேற்கொள்ளலாம். மின் வாரிய அலுவலகங்களில் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஆதார் எண்ணை எத்தனை மின் இணைப்புகளும் இணைத்துக் கொள்ளலாம். ஒருவர் ஐந்து இணைப்புகள் வைத்திருந்தாலும் […]

Continue reading …

தமிழக அரசின் போக்குவரத்துத்துறையின் புதிய திட்டம்!

Comments Off on தமிழக அரசின் போக்குவரத்துத்துறையின் புதிய திட்டம்!

இன்று முதல் தமிழக அரசின் போக்குவரத்து துறை பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் முதல்கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயரை ஒலிபெருக்கி மூலம் இனி கேட்கலாம் என்றும் இத்திட்டம் இன்று அதாவது நவம்பர் 26 முதல் தொடங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. பேருந்து நிறுத்தங்கள் அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திலேயே […]

Continue reading …