மாவட்ட நிர்வாகம் திருவண்ணாமலையில் டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து தீபத்திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதையடுத்து டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Related posts:
நாகையில் மாவட்ட அளவிளான பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டி !
கார்கில் 25ம் ஆண்டு வெற்றி தினம், ராணுவ வீரர்கள் அணிவகுப்பு.
அடுத்த மூன்று நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும்... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
விழிப்புணர்வு மாரத்தானில் பரிசு வழங்குவதில் குளறுபடி.போட்டியில் பங்கேற்ற இரு சிறுமிகள் மயங்கி ரோட்டி...



