அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் “அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக பிடிக்கும். பாஜக உள்ளே நுழையக்கூடாது என்று கூறும் கட்சிகள் இதை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் கிஷோ “பாஜக தென்னிந்தியாவில் வேகமாக வளரும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறினேன், அதுதான் தற்போது நடந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது, ஒரிசாவிலும் வளர்ந்துள்ளது, கேரளாவின் ஒரு எம்பி பெரும் அளவுக்கு பாஜக […]
Continue reading …நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழிசையிடம் நடந்து கொண்டது போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொள்வாரா என்று திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அமித்ஷாவுக்கு தமிழிசை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. […]
Continue reading …கடலூர் பகுதியை சேர்ந்த 300 பேரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து ரூ.4 கோடி மோசடி செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் செம்மண்டலம் வில்வராயநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். அதில் தன்னுடன் பள்ளியில் படித்த சித்திரைபேட்டையை சேர்ந்த ரெஜினா என்பவரை திருமண நிகழ்வு ஒன்றில் சந்தித்து பேசிய போது கும்பகோணத்தில் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி […]
Continue reading …மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம், மறுதேர்வு எழுதினால் அதன் மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று 2வது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களிடம், “நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதி பூண்டுள்ளது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு […]
Continue reading …ஓசி டிக்கெட் என நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து. சிறை பிடித்த மக்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பெண்களைக் கண்டால் ஓசி டிக்கெட் என்று நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
Continue reading …கார்கில் 25ம் ஆண்டு வெற்றி தினம், ராணுவ வீரர்கள் அணிவகுப்பு. கார்கில் போரின் 25ம் ஆண்டு, வெற்றி தினத்தையொட்டி, தனுஷ்கோடியிலிருந்து, இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாக, புறப்பட்டு புதன்கிழமை மதுரை வந்து சேர்ந்த ராணுவ வீரா்களை, மாநகரக் காவல் ஆணையர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது கார்கில் போர் வெற்றி குறித்தும், இதில் ராணுவ வீரா்களின் உயிர்த் தியாகம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
Continue reading …அய்யம்பட்டி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு விழா. மதுரை, சோழவந்தான் அருகே எஸ். அய்யம்பட்டி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. அர்ச்சகா்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து, புனித நீர் கலசங்கள் கோயில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் மந்தையம்மன் உள்பட பரிகார தெய்வங்களுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Continue reading …கடந்த ஜனவரி 2ம் தேதி திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய விமான நிலையத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இன்று காலை 6 மணி முதல் புதிய விமான முனையமானது செயல்பாட்டுக்கு வந்தது. சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ விமானம் புதிய முனையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கியது. இதனை வரவேற்கும் விதமாக வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்றனர். சிங்கப்பூரிலிருந்து புதிய முனையத்திற்கு மற்றொரு விமானம் வந்தது. விமான நிலையத்தில் புதிய முன்னேற்றத்திற்கு வந்த விமான […]
Continue reading …கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலை உள்ளது. இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், “மாணவர்களின் […]
Continue reading …மதுரை மாவட்டம் பாலமேடு, தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த மே மாதம் 31ஆம் தேதி இவ்விழாவானது செல்லாயி அம்மனுக்கு சாமி சாட்டுதல் செய்து காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த இந்த உற்சவ விழாவில் சிறப்பு வானவேடிக்கை முழங்க திருக்கண் திறந்து அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு […]
Continue reading …