
சென்னை, அக் 4: சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (04.10.2021) வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் மூன்றாம் நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடைபயணத்தை, வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் திருமதி கருணப்பிரியா, வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் திரு.நாகநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஒரு […]
Continue reading …
சென்னை, அக் 4: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு, சென்னையில் இருந்து, 5, 8ம் தேதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை சேர்ந்த […]
Continue reading …
அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க இணைய வழியில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றி விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்புமில்லாத இந்த திடீர் உத்தரவு தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அறுவடை செய்த […]
Continue reading …
தமிழகம் முழுவதும் இன்று (03.10.2021) நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்களை காலை 7 மணி முதல் தேனி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 24,882 மையங்களில் நடைபெற்றது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டது. முதலாவது மாபெரும் கோவிட் […]
Continue reading …
இந்திய யோகா சங்கத்தின் நிர்வாகக் குழு, இச் சங்கத்தின் உச்ச அமைப்பாகும். இதில் காயத்ரி பரிவாரின் டாக்டர் பிரணவ் பாண்டியா, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனராகிய சத்குரு ஜக்கி வாசுதேவ், சாந்தா குரூஸ் யோகா நிறுவனத்தின் டாக்டர் ஹன்சா யோகேந்திரா, ரிஷிகேஷ் பரமார்த் நிகேதனின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, கைவல்யதாமா யோகா நிறுவனத்தின் தலைவராக தற்போது உள்ள எஸ். ஓபி திவாரி, சஹாஜ் மார்க்கின் கமலேஷ் பட்டேல், மோக்ஷயாதன் யோக சன்ஸ்தானின் சுவாமி பாரத் பூஷன் மற்றும் மொரார்ஜி […]
Continue reading …
சென்னை, அக் 3: சென்னை, பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகில் இன்று (03.10.2021) காலை, உயிரின வாரவிழாவை முன்னிட்டு, வனத்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சைக்கிள் பேரணி நடந்தது. இதை, தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திடவும், வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித-வனஉயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, […]
Continue reading …
சென்னை, அக் 2: மகாத்மா காந்தியின், 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், அவருக்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். இதையொட்டி சென்னை மெரினா […]
Continue reading …
சென்னை, அக் 2: சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் இன்று (02.10.2021) வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் முதல் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மாராத்தான் ஓட்டத்தை வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் திரு.அசோக் உப்ரேதி ,இ.வ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். வன உயிரின வாரவிழவில், வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தை வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் திரு. அசோக் உப்ரேதி அவர்கள் துவக்கி வைத்து கூறுகையில், “முதலமைச்சர் […]
Continue reading …
தொலை தொடர்புத்துறை செயலாளராக இருந்த அன்சு பிரகாஷ் ஐ.ஏ.எஸ்., நேற்றுடன் ஒய்வு பெற்றதையடுத்து, புதிய செயலாளராக கே.ராஜாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக இவர், மத்திய நிதியமைச்சக்தின் பொருளாதார விவகாரத்துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றினார். கடந்த 1989 ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மத்திய அரசின் பல பதவிகளை வகித்துள்ளார். தமிழக அரசிலும், சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன நிர்வாக இயக்குனர், வணிகவரித்துறை ஆணையர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.
Continue reading …
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘தேசத்தந்தை – மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ அநீதிக்கு எதிராக புதிய போராட்ட வழியை, மகாத்மா காந்தி காட்டினார் – அது உண்மை மற்றும் அகிம்சை மற்றும் இது மனிதகுலத்தின் மீது ஒரு நிரந்தர முத்திரையை விட்டுச்சென்றது. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை முறையில், […]
Continue reading …