
சென்னை, அக் 1: சென்னையில் கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுனர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதையடுத்து நிருபர்களிடம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறிகையில், “சென்னையில் கடந்த […]
Continue reading …
தர்மபுரி, செப் 30: தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, அரசு திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று […]
Continue reading …
சென்னை, செப் 30: நில மோசடி வழக்கு விசாரணைக்கு, டிசம்பர் 7ம் தேதி நேரில் ஆஜராகக்கோரி, நடிகர் வடிவேலுவுக்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மோசடி தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமீபத்தில், இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், நடிகர் வடிவேலு வருமான வரி […]
Continue reading …
தர்மபுரி, செப் 30: தர்மபுரி சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்றது முதல், அவர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார். தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அவரே நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதனால், பொதுமக்கள் மத்தியில், அவருக்கு உள்ள செல்வாக்கும் மதிப்பும் உயர்ந்து வருவது நன்றாகவே தெரிகிறது. இந்நிலையில் தர்மபுரி […]
Continue reading …
சென்னை, செப் 29: ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த, 1991 -96 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இவர் பதவியில் இருந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்துவதாக கூறி, இவரது கணவர் பாபு, அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரின் கணவர் பாபு மற்றும் சண்முகம் […]
Continue reading …
சென்னை, செப் 29: தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், வரும் அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் 3,000த்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தினமும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை நடந்துள்ள மூன்று கட்ட தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 70 லட்சம் பேருக்கு […]
Continue reading …
சென்னை, செப் 28: ‘திருவண்ணாமலை கோவிலின் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில், 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்பிக்கலாம்’ என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சி துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த பயிற்சியில் சேர விரும்புவோர், வரும் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, இந்து சமய […]
Continue reading …
தஞ்சாவூர், செப் 27: “ஏழு உலக அதிசயங்களை விட, தஞ்சை பெரிய கோவில் அதிக சிறப்புகளை கொண்டது” என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக, மத்திய ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தமிழகம் வந்துள்ளார். தஞ்சாவூருக்கு நேற்று வந்த பிரகலாத் சிங், இங்குள்ள பெருவுடையார் கோவிலுக்கு சிறப்பு அனுமதி பெற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் வராகி அம்மன், பெருவுடையார், பெரியநாகி […]
Continue reading …
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கோட்டம் பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உட்பட்ட பகுதிகளில் இன்று (26.09.2021) நடைப்பெற்று வரும் மாபெரும் மூன்றாவது தடுப்பூசி முகாமை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்லாவரம் நகராட்சியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் படர்ந்து இருந்த ஆகாய தாமரை அகற்றும் பணி மற்றும் ஏரியினை ஆழப்படுத்தி கரையை பலம்படுத்தும் பணியினை பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையானது 24.57 லட்சம் ஆகும். […]
Continue reading …