Home » Archives by category » தமிழகம் (Page 329)

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

Comments Off on திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

சென்னை,மே 18 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (18.5.2020) தலைமைச் செயலகத்தில், திருப்பூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசு, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் […]

Continue reading …

இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை .. ஊரே சிரிக்கிறது ! வெளுத்து எடுத்த அமைச்சர் !!

Comments Off on இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை .. ஊரே சிரிக்கிறது ! வெளுத்து எடுத்த அமைச்சர் !!

திமுக தலைவர் ஸ்டாலினை அதிமுக அமைச்சர் மபோய் பாண்டியராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் :-இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக மக்கள் மீது அக்கறை உள்ளது போல் நாடகமாடும் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட மாட்டோமா என்று ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகளை பார்த்து ஊர் சிரிக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது கரோனா என்னும் கொடிய நோய். வல்லரசு நாடுகள் முதல் […]

Continue reading …

கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்!

Comments Off on கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்!
கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்!

சென்னை,மே 17 இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் தவணைகளை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதை மதிக்காமல் வாகனக் கடன் தவணைகளை உடனடியாக செலுத்தும்படி கடன்தாரர்களுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சில நிதி நிறுவனங்கள் வழக்க்கம் போலவே வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!

Comments Off on விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!
விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!

கரோனா பரவலால் கடந்த இரண்டு மாத காலமாக உலகமெங்கும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த சில தினங்களாக,  தமிழகத்தில் மிகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தான்  பல தன்னார்வலர்கள் இறங்கி மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் […]

Continue reading …

தி.மு.க எம்.பி மீது கொலை மிரட்டலின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை!

Comments Off on தி.மு.க எம்.பி மீது கொலை மிரட்டலின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை!

திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி ஆன ஞான திரவியம் மற்றும் அவருடைய மகன்கள் மீது காவல்துறையினர் கொலை மிரட்டல் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கனபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரி பகவதி. இவர் இன்று காலை அவருடைய கணவர் மற்றும் மகளுடன் சென்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.ஐ சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எம்.பி., ஞான திரவியம் எனக்கு உரிமையான ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சித்தார். மேலும் எம்பியும் […]

Continue reading …

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கான முன்னறிவிப்பு!

Comments Off on தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கான முன்னறிவிப்பு!
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கான முன்னறிவிப்பு!

புது டெல்லி,மே 16 இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கக்கூடும். கேரளாவில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும். இந்தியப் பருவமழை மண்டலத்தில், முதல்கட்டப் பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் […]

Continue reading …

அரசு அலுவலர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு!

Comments Off on அரசு அலுவலர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு!
அரசு அலுவலர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை,மே 15  தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு -3 காலகட்டத்தில் 33% பணியாளர்களைக் கொண்டு அரசுப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காகவும் பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சனிக்கிழமைகளிலும் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தி 18.05.2020 அன்றிலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவித்து அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் 18.05.2020 அன்றிலிருந்து தொகுதி-‘அ’ (Group-A) அலுவலர்கள் மற்றும் அந்த ஊதிய விகிதம் […]

Continue reading …

மராட்டியத்தில் தங்க இடமின்றி, உணவின்றி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்!

Comments Off on மராட்டியத்தில் தங்க இடமின்றி, உணவின்றி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்!
மராட்டியத்தில் தங்க இடமின்றி, உணவின்றி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்!

சென்னை,மே 15 கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டியத்திற்கு […]

Continue reading …

கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி ஒன்பது மாதங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது!

Comments Off on கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி ஒன்பது மாதங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது!
கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி ஒன்பது மாதங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது!

கடலூர், மே 15 விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது முந்தரி காட்டில் கடந்த 13.7.2019 ஆம் தேதி உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக  ஊமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஊமங்கலம் காவல் துறையினர், அடையாளம் தெரியாமல், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Continue reading …

ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கிய இளைஞர் காங்கிரஸ்!

Comments Off on ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கிய இளைஞர் காங்கிரஸ்!
ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கிய இளைஞர் காங்கிரஸ்!

கோவை மே 15வே மாரீஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக  கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, அத்துடன் ஊரடங்கு உத்தரவு இருந்த காரணத்தினால் கோவை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி போய் இருந்தனர். அத்துடன் அன்றாட வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரம் அரசம்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் […]

Continue reading …