கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இருந்து பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு!

Filed under: இந்தியா |

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. அங்கு உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் முன்னர் இருந்த நிலைமையை கொண்டுவர சீனாவின் படைகளை பின்வாங்குமாறு இந்தியா வலியுறுத்தியது.

இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுக்களிலும் இந்த விஷயத்தை வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை சீனா மறுத்து வருகிறது. சீனா படைகள் பின்வாங்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.