பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.

Filed under: தமிழகம் |

பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.

பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல்களை கண்டித்தும் இதுவரை செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை மறைக்க முயற்சி செய்வதை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் எம். சரவணன் தலைமையில் சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகாமையில் நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் கவுன்சிலர் ஹேமா, கள்ளத்தெரு குமார், மலைக்கோட்டை ரவி, பாலக்கரை ஜெரால்ட், அண்ணா சிலை விக்டர், பஜார் மைதீன் ,எஸ் . சி. பிரிவு தலைவர்கள் அல்லூர் பிரேம், கண்ணன், ஜீவா நகர் மாரிமுத்து, மார்கெட் மாரியப்பன், இளைஞர் அணி அல்லூர் அருண், ராஜீவ் காந்தி, வைரவேல் சண்முகம், ஜிம் விக்கி, ஸ்ரீராம், சிந்தை மன்சூர் வினோத் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.