கொரோனா நோயாளி தப்பியோட்டம்: பதட்டத்தில் மருத்துவர்கள்!

Filed under: சென்னை |

சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதி சின்மயா நகரை சேர்ந்த ஒரு நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் மூலம் இவருக்கு சென்ற 12ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆகவே இவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பின்பு காணாமல் போன வரை காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் தேடி வருகின்றனர்.