கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதனை தடுக்க தமிழக அரசு ரெடி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Filed under: தமிழகம் |

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்க கொரோனா வார்டுகளையும் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது; தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், 90% பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாம் நிலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.